கெட்ட நேரம் வரும்போது நல்லது நடக்க பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு வெள்ளி டம்ளர் கட்டாயம் தேவை. இரவு தூங்க செல்லும் போது பூஜை அறையில் இந்த வெள்ளி பாத்திரம் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க வேண்டும்.
அதில் இரண்டு துளசி இலைகளை கூட போடலாம். துளசி இலை கிடைக்கவில்லை என்றால் வாசம் நிறைந்த ஏலக்காய் அந்த தண்ணீரில் போட்டு வையுங்கள்.
நறுமணம் நிறைந்த இந்த தண்ணீர், இரவு முழுவதும் பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து, குளித்து விட்டு, வாசலில் கோலம் இட்டு, வீடு கூட்டிவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை நினைத்து இந்த தண்ணீரை வீடு முழுவதும் மூளை முழுக்குகளில் தெளிக்க வேண்டும்.
பரிகாரம் அவ்வளவுதான். தினம் தோறும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வந்தால் கெட்ட காலத்திலும் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🙏அம்மன் துணை🔱 #🔍ஜோதிட உலகம் 🌍 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
