ShareChat
click to see wallet page
#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர், ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர், சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு , துருக்கி கமால் பாட்சாவின் போராட்டமும் உண்டு லால் கிருஷ்ண் அத்வாணி, கராச்சியில் பிறந்தவர் தேசபிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசபற்றாளர் இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார், சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை நாடு ஒன்றே அவரின் மூச்சானது, மதம் அவரின் அபிமானம் அதன் நெறிவழி நின்றாரே தவிர நிச்சயம் வெறிபிடித்து அலைந்தார் என சொல்லமுடியாது ராமர் கோவில் சிக்கல் என்பது அன்றே இருந்த குரல், வெள்ளையன் காலத்திலும் இருந்தது, சுதந்திர போராட்டத்தில் மங்கி இருந்தது, சுதந்திர இந்தியாவில் ஓங்கி ஒலித்தது அத்வாணி காங்கிரஸுக்கு மாற்றுதேடிய தலைவர்களில் ஒருவர், காங்கிரஸ் எனும் அடிமை கட்சியால் தேசத்துக்கு நன்மை விளையாது, இந்நாட்டின் மதத்தையும் தர்மத்தையும் கலாச்சாரத்தையும் காங்கிரஸ் காக்காது என்ற உண்மையினை அப்பொழுதே உணர்ந்திருந்தார் அப்படித்தான் ஜனதா கட்சிக்கும் வந்தார் அத்வாணியால் மொரார்ஜி தேசாயிடனும் ஒட்டமுடியவில்லை மொரார்ஜியும் சிறுபான்மை வாக்குகளுக்கு அஞ்சுகின்றார் என்றபொழுது மனம் நொந்தார் ஜனதா கூட்டணி சர்வதேச அகதிமுகாம் போல ஆளாளுக்கு ஒரு பாஷை பேசிகொண்டிருந்தார்கள், இந்திராவினை எதிர்க்க வேண்டும் என கூடினார்களே ஒழிய, ஆட்சிக்கு வந்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் யாரிடமுமில்லை, எல்லாம் சுயநலம் இத்தேசத்தின் தர்மம் பற்றியோ கலாச்சாரம் பற்றியோ இதன் மாபெரும் தாத்பரியம் பற்றியோ அழிந்து கொண்டிருக்கும் அதன் அடையாளம் பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை தான் ஒரு "இந்து" என கம்பீரமாக சொல்ல ஒரு அரசியல் தலைவனும் இல்லை என்பது அவருக்கு புரிந்தது அப்படி ஒரு தலைவன் வராமல் தேசம் செழிக்காது என்பதும், போலி மதவாதமின்மையும் இங்கு தேசத்தை அழித்து அந்நிய சக்தியின் கரங்களை வலுக்க வைக்கும் என்பதை உணர்ந்தார் தேசத்தில் இந்துமதம் சரிவதையும் சிறுபான்மைகள் அரசியல்வாதிகளுடன் ரகசியமாக கைகோர்த்து அலைவதையும் நாட்டின் பழமையும் அடையாளமும் அழிவதெல்லாம் கண்டு மனம் நொந்தார் இந்திராவுக்கு பின் தேசம் தத்தளித்தபொழுது அத்வாணி பாரதீய ஜனதா என களம் காண்கின்றார் முதலில் அக்கட்சி பெற்ற இடம் வெறும் 2, அப்படித்தான் அக்கணக்கு தொடங்கியது ஆம் தமிழக பாஜகவினை விட அன்றைய 1980 பாஜக மிக மோசமாய் இருந்தது இந்திராவுக்கு பின் ராஜிவின் குழப்பமான காலத்தில் கட்சி வளர்த்தார் அத்வாணி, நாடெல்லாம் ஓடினார், மெல்ல மெல்ல கட்சி வளர்ந்தது நாம் திராவிடர்கள், நாம் மராட்டியர்கள் என தேசம் ஒவ்வொரு பக்கமும் இழுபட்ட காலங்களில் நாம் இந்துக்கள் என்பதை தவிர அத்வாணியிடம் தேசம் காக்க வேறு வழி இல்லை பல வகையான‌ அந்நிய சக்திகள் நாம் தமிழர், நாம் திராவிடர், நாம் மராட்டியர் என பலரை உருவாக்கி தேசத்தை துண்டாடும் காட்சிகளையெல்லாம் களைய தனி மனிதனாக நாமெல்லாம் இந்தியர்கள், நாமெல்லாம் இந்துக்கள் என கிளம்பினார் அது திலகர் வெள்ளையனுக்கு எதிராக செய்த காட்சிகளின் சாயல், அத்வாணி சுதந்திர இந்தியாவில் அதை செய்தார், முதன் முதலாக செய்தார் அதுவரை அப்படிபட்ட காட்சியினை இந்தியா காணவில்லை, தேசம் அம்மனிதன் பின்னால் அணிதிரண்டது, காட்சிகள் மாற தொடங்கின‌ காங்கிரசுக்கு மாற்றாக தனிபெரும் கட்சியாக பாஜக உருவாகும் அப்பக்கம் ராஜிவ் சரியான தலைவராக இருப்பார் என கணிக்கபட்ட பொழுதுதான் ராஜிவ் கொலை நடந்தது, அது காங்கிரசின் அழிவினை கொஞ்ச காலம் தள்ளிபோட்டது இல்லையேல் அன்றே பாஜக ஆட்சிக்கு வந்திருக்கலாம் அத்வாணி வாழ்வின் மிகபெரிய சர்ச்சை "அயோத்தி சம்பவம்" , அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என நாடெல்லாம் அவர்தான் பிரச்சாரம் செய்தார், மக்களும் திரண்டனர். மாநில அரசு பாஜகவிடம் இருந்தது அந்த ராமர்கோவில் கோஷம் அத்வானி எழுப்பியது அல்ல, அது 1500களிலே இருந்த சிக்கல், அது அப்படியே காலம்தோறும் தொடர்ந்து வந்த சிக்கல், அதனை இந்துக்கள் கண்ணீரில் நெருப்பு வளர்த்து காத்தனர் அது தான் வளர்ந்து அத்வாணி கைகளில் வந்தது. நிச்சயம் மத்திய அரசு நினைத்தால் தடுத்திருக்கலாம், ஆனால் ராமர்கோவிலை காங்கிரஸ் தடுப்பதாக உபி மக்கள் கருதினால் தங்களுக்கு ஆபத்து என அமைதிகாத்தது. ஆம் அந்த சம்பவத்தில் மத்திய அரசுக்கும் பங்கு இருந்தது, பாஜகவின் எழுச்சியினை தடுக்கும் சதி அது எல்லோரும் சேர்ந்துதான் அதை செய்தார்கள், அத்வாணி நேரடியாக குற்றம் சாட்ட்பட்டார் பலர் எதிர்கட்சியில் இருந்தார்கள் அவ்வளவுதான் விஷயம் அத்வாணியின் உழைப்பே பாஜகவினை இன்று அசுர சக்தியாய் நிறுத்தி வைத்திருகின்றது அத்வாணி குழப்பமான காலகட்டத்தில் மதமோ இல்லை எதையோ முன்னிறுத்தி ஒரே தேசமாக இதை நிறுத்தினார் அத்வாணி எழும்பியிராவிட்டால் அப்படி உழைத்திராவிட்டால் இந்நேரம் டெல்லி பாராளுமன்றம் கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் சர்கஸ் கூடாரமாயிருக்கும் அத்வாணி அந்த ஆபத்தை முறியடித்திருக்கின்றார் மிக உறுதியான அரசு அவரால் அமைக்கபட்டிருகின்றது, காஷ்மீர் விஷயத்தில் நிறைவேறியது அத்வாணியின் பெருங்கனவு. மதம், இனம், சாதி என திசைமாறி ஆளுக்கொரு கோஷ்டி ஆளுக்கொரு கொள்கை என குழம்பிய இந்திய அரசியலை அவர் ஒரே கட்சி ஒரே நாடு என மீட்டெடுத்தார் இந்துமதத்தை நாட்டின் கலாச்சாரமாகத்தான் அவர் கண்டார், அதனில் நாட்டுபற்றும் கலந்திருந்தது அதை மறுக்கமுடியாது நாமும் கவனிக்கின்றோம் இங்கு பல கட்சிகள் பிரிவினைவாதிகளால் நடத்தபடுகின்றன, சில கட்சிகளின் மூலமும் இயக்கமும் வேறொரு நாட்டு சக்தியின் கையில் இருக்கின்றது பாஜக ஒன்றே இந்நாட்டுக்காகவும் இந்நாட்டு கலாச்சார மதத்துக்காகவும் அடையாளதுக்காகவும் இங்குள்ளவர்களால் இயக்கபடுகின்றது இதை இன்னொருநாளில் நீங்கள் உணர்வீர்கள், பாஜக வெற்றிமேல் வெற்றிபெற அதுதான் காரணம் இன்று அந்த அத்வாணிக்கு பிறந்த நாள் இந்திய அரசியலில் இரு தலைவர்கள் ஒரு கட்சிதலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஆம் ஒருவர் அண்ணா இன்னொருவர் அத்வாணி திமுக இங்கு பெரும் சக்தியாக எழும்பிற்று என்றால் முதல் காரணம் அண்ணா, அவரிடம் ஒரு விஷேஷித்த குணம் இருந்தது, ஆம் யாரையும் கைதூக்கிவிடுவார், கட்சிக்காரனில் திறமையானவன் ஆற்றல் மிகுந்தவனை மேடை ஏற்றிவிடுவார் என் குடும்பம் என்றோ, என் உறவு என்றோ இல்லை இவன் எனக்கு போட்டியாக வந்துவிடுவானோ எனும் குறுகிய குணமோ துர் எண்ணமோ அவரிடம் இருந்ததில்லை தம்பிகள் என எல்லோரையும் கொண்டாடினார் எல்லோரையும் அரவணைத்தார், முதலமைச்சாராக அமர கூட அவர் விருப்பம் கொள்ளவில்லை, அதை நெடுஞ்செழியனிடம் கொடுத்துவிட்டு டெல்லியில் எம்பியாக தொடரவே விரும்பினார் அவரை முதலமைச்சராக இழுத்து போட்டது கருணாநிதியின் தந்திரம், அதன் பின் அவரே அண்ணாவுக்கு பின் அமர்ந்து தன் மகனுக்கு வழிசமைத்ததெல்லாம் அவரின் சாதுர்யம் அத்வாணி அண்ணா வழியிலேதான் இருந்தார், யாரை எல்லாமோ முதல்வராக்கினார் பிரதமராக்கினார், இன்றும் பாஜக அத்வாணி வழியில்தான் குடும்ப அரசியலை தவிர்த்து கவனமாக நாடு முக்கியம் கட்சி முக்கியம் என பயணிக்கின்றது நிச்சயம் அத்வாணியே பிரதமராக மிக தகுதியான நபர், கட்சிக்கு அவர் உழைத்த உழைப்பு அப்படி, மிக பெரும் சவால்களை எதிர்கொண்டார் அச்சுறுத்தல் பெற்றதில் அவர் முதலிடம், பாராளுமன்ற தாக்குதலே அவரை குறிவைத்துதான் நடந்தது, கோவையில் கூட தெய்வாதீனமாக உயிர் தப்பினார் ஆனால் எதை பற்றியும் கவலையின்றி கட்சியினை வளர்த்து அதை பெரும் சக்தியாக்கி தன் அரசியல் வளர்ப்புகளில் ஒருவரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து ஒதுங்கியிருக்கின்றார் அந்த ஒரு விஷயத்தில் அவரை வணங்கலாம், இந்தியாவின் கரிபால்டிக்கு, பாஜகவின் பீஷ்மருக்கு, இந்நாட்டின் ஸ்ரதன்மையினை நிர்மானித்தவருக்கு, நாட்டின் ஒற்றுமையினை ஒருமைபாட்டை ஒரே இந்தியாவினை மிக சரியான வேளையில் காத்தவருமான அத்வாணிக்கு இன்று பிறந்த நாள் அவர் நிச்சயம் 100 ஆண்டு காலம் வாழ்வார் அவர் போராடியபடி காஷ்மீர் தேசத்தோடு வந்தாயிற்று, ராமர் கோவிலும் எழும்பி விட்டது, பொது சிவில் சட்டமும் நடைமுறைக்கு வரும் அதை பெற்று கொடுத்த தருமன் அத்வாணி, அந்த மாபெரும் போரில் கண்ணனும் அவனே தர்மனும் அவனே, களம் கண்ட அர்சுணரும் அவரே, பீஷ்மரும் அவரே ராமனை மீட்ட விஸ்வாமித்திரரும் அவரே தர்மம் அவரை மீட்டெடுத்து வழக்கில் இருந்தும் கொண்டுவந்தது, 500 ஆண்டு கால மக்களின் ஆன்மாக்காள் கோடி இந்துக்களின் ஆத்மபலமும் தெய்வமும் அவரை மீட்டெடுத்து தன் காலத்திலே தன் நோக்கம் நிறைவேறுவதை காணும் வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது, அது அத்வாணிக்கு அமைந்தது எது எப்படியாயினும் அரசியல் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் அத்வாணி என்றுமே பெரும் உதாரணமாய் இருப்பார் அந்த அதிசய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் ராமரை வணங்கலாம் ஆனால் எம்மை பொறுத்தவரைக்கும் அவர் தவமுனி விசுவாமித்திரனின் வடிவம், அந்த தவமுனி ஆயிரம் பிறைகளை காணட்டும், தேசம் செழிப்பதை மனமார காணட்டும் நாம் சொல்வது மிகைபடுத்தல் அல்ல, செய்ய வேண்டிய நன்றிகடன் நாயன்கார்கள் சிவனுக்காய் வாழ்ந்தவர்கள், இதனால் சிவாலயங்களிலெல்லாம் அவர்களுக்கு சன்னதி உண்டு அப்படி பெரும் அச்சுறுத்தலிலும், உயிர் மிரட்டலிலும் , காலுக்கு அடியில் ஆபத்தை கண்டும் பெரும் ஆபத்துக்களை கடந்தும் ராமனுக்கு ஆலயம் கண்டார் அத்வாணி அவருக்கு ராமர்கோவில் ஒரு மூலையில் ஒரு சிலை வைக்கபட வேண்டும் அது வரும்கால சந்ததி 500 ஆண்டுகாலம் இத்தேசம் சந்தித்த சிக்கலையும், அது மீளா அத்வாணி செய்த மாபெரும் போரையும் உழைப்பையும் சொல்லும் வரலாறாக அமையும் ஆலய கமிட்டி அதை செய்வார்கள் என கருதுகின்றோம் ராமருக்கு அனுமார் அருகில் இருப்பது போல் தொலைதூரத்தில் பெருமகன் அத்வாணியும் எக்காலமும் நிற்கட்டும் பெருவாழ்வு வாழ்ந்து, அரும்பெரும் சாதனைகளை செய்து தேசத்துக்கு ஆன்மீக, அரசியல் என இருவழியிலும் பெரும் ஒளிகொடுத்த அப்பெருமகன் , இரட்டை ஜோதிகளை ஏற்றிய அப்பெருமகன் இரு நூறுவருடம் வாழ தேசம் வாழ்த்துகின்றது தமிழக அண்ணாமலை அத்வாணியின் சாயல், அப்படியே இன்னும் அவரிடம் இன்னும் அத்வாணியின் அனைத்து குணங்களும் வளரவேண்டும், கட்சியில் அத்வாணி போல பலரை அவர் வளர்த்துவிட வேண்டும் அதுதான் இப்பொழுது தமிழகத்துக்கு மிக அவசியமானது அத்வாணி காட்டிய அந்த வழியில் அண்ணாமலை செல்வதுதான் தமிழக பாஜகவில் அவசியாமான ஒன்று ராமர்கோவில் வரலாற்றில் ஒரே ஒருமுறை மட்டும் இடிக்கபடவில்லை, அது ஏகபட்டமுறை இடிக்கபட்டும் கட்டபட்டும் மீண்டுகொண்டே இருந்தது அது பாரத அரசர்களின் தலமையிடம் அல்லது மரியாதை நிமித்தம் முடிசூடும் இடம் எனும் மரபு இருந்ததால், பாரத தேச அரசர்கள் ராமர்வழி ஆட்சி நடத்துபவர்கள் எனும் நம்பிக்கையும் உறுதிமொழியும் இருந்ததால் அந்நியருக்கெல்லாம் அது இலக்காயிற்று அதுதான் ரானா சங்காவினை பாபர் ஒழித்தபோது இனி இந்நாட்டின் அரசன் நான் என அப்போதும் மொகலாயரால் மாற்றபட்டது காலவோட்டத்தில் கடைசியாகத்தான் இப்போது மீண்டிருகின்றதே தவிர அது ஒரே முறை மட்டும் வீழ்ந்து எழவில்லை, விழ விழ எழுந்தது அதனை யார் யாரோ மீட்டார்கள், கஜினியின் ஆட்கள் முதல் பலர் இடித்துபோட்ட பொழுதெல்லாம் ராஜபுத்திர மன்னர்கள் மீள மீள கட்டினார்கள் அப்படி நம் தலைமுறையில் கண்ட தலைவர் அத்வாணி, 400 வருடங்களுக்கு பின் தேசம் கண்ட பெரும் தலைவரும் அவர்தான் சுதந்திர இந்தியாவின் ராஜகுருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மதுரா காசி ஆலயம் முழுக்க மீட்கட்டுவதை காண , முழு காஷ்மீரமும் தேசத்தோடு இணைவதை காண அவர் நம்மோடு இருக்கவேண்டும் என ஒவ்வொரு இந்துவும் பிரார்தித்தல் பெரும் கடமை. அதுவே நன்றியுடமை. முகநூல் பதிவு தரவுகளில் இருந்து நன்றி : பிரம்ம ரிஷியார்
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat

More like this