ShareChat
click to see wallet page
*ஆனந்த வாழ்வுக்கு அனுமன் வழிபாடு* சொல்லக்கூடிய சொல்லை யோசித்து, எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் மகிழ்ச்சி அடைவாரோ அதைச் சொல்பவன்தான் கெட்டிக்காரன். ராமபிரான் சீதையே தேடச் சொல்லி அனுமானை தூது அனுப்பினார். அனுமான் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று அரசு வாகனத்தில் இருந்த சீதையே பார்த்தார். அது அசோகவாகனம் என்பதை உணர்ந்தார். காரணம்,சோகத்தோடு சீதை அமர்ந்திருந்தாள். அதன் பிறகு ராமனை பற்றி எடுதுரைத்துவிட்டு மீண்டும் ராமனிடம் வந்தார். அப்பொழுது ராமபிரான் மனதில் குழப்பம் அதிகமாக இருந்தது. சீதை கற்போடு இருக்கிறாளா? காவலில் இருக்கிறாள? என்றெல்லாம் சிந்தித்து கொண்டிருந்தார். அனுமானை பார்த்து மகிழ்ச்சி கொண்டு தகவழலை கேட்டார். அதற்க்கு அனுமான் மூன்றே வார்த்தைகளில் அவர் சந்தேகத்தை தீர்த்து வைத்தார். அந்தச் சொற்கள் "கண்டேன் அந்த கற்பினுக் கனியே" என்பது தான். அதாவது சீதையே கண்டேன்; அவள் களங்கமில்ல கற்போடு இருக்கிறாள் என்ற பொருளில் ராமாயணம் அனுமானை பற்றி வர்ணிக்கிறது. அதனால்தான் அனுமான் " சொலின் செல்வன்" என்று பெயர் பெற்றார். அப்படிப்பட்ட அனுமானை நாம் வழிப்பட்டால் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய ஆற்றல் நமக்கு வந்து சேரும். உதிரியாக இருப்பவர்களை ஒன்று சேர வைக்கும் ஆற்றல் அனுமானுக்கு உண்டு. கை கூப்பி தொழுதால் கருத்து வேறுப்பாடுகள் அகலும்.இல்லத்தில் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயர் படத்தை பூஜை அறையில் வைத்து, அதற்கு ஒரு மண்டலம் வாலில் போட்டு வைத்து வழிபாடு வருவார். மேல் நோக்கி பொட்டு வைப்பதா ? கீழ் நோக்கி பொட்டு வைப்பதா? என்பதும் அவரவர் கோரிக்கைகளை பொறுத்துதான் அமைகிறது. எந்த கொர்ரிக்கைக்கு அனுமானை எப்படி வழிபட வேண்டும்? என்பதை அறிந்து கொண்டால் வந்த துயரங்கள் விலகி ஓடும். வளர்ச்சி பாதையிலும் அடியெடுத்து வைக்க இயலும், ஜெயா அனுமான் , வீர அக்ஞ்சநேயர் ,சிவா அக்ஞ்சநேயர் என்று விதவிதமாக அனுமான் அருள் தருகிறார். சுசீந்திரம் தானுமாலையன் கோவிலிலும், நாமக்கல் அஞ்சநேயர் கோவிலிலும் விஷ்பரூப அஞ்சநேயர் தரிசனம் தருகிறார். *சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அஞ்சநேயரை வழிப்பட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்,* விரதமிருக்கும் நாட்களில் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.தம்பதியர்கள் உடல் உறவை தவிர்த்து விடுவர் அனுமானை முலயுமையாக தியானித்து ஒரு வேலை உணவு மட்டும் உண்டால் மட்டும்உன்னத பலன் கிடைக்கும் , அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டால் தடைகள் அகலும். வெற்றி மாலை அணிவிப்பவர்கள் தமது கோரிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையில் தாரா பலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி ,கடலை,கற்கண்டு, வாழைப்பழம்,போன்றவைகளை அனுமானுக்குரிய நைவேத்தியங்களை அமைகின்றன. *"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றேய்த் தாவி, அஞ்சிலே ஒன்றா ராக ஆசிரியருக்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டலயறார் ஊரில் அஞ்சிலே ஒன்றே வைப்பான் அவன் நம்மை அளித்துக்காப்பான்!" என்று கம்பர் பாடுவார்.* அப்படிப்பட்ட ஆற்றல் தரும் அனுமானை நாம் போற்றி கொண்டாடுவோம். பொன்னான வாழ்கையே அமைத்துக் கொள்வோம். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat

More like this