அவல் பாயசம் (போஹா கீர்)
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
பால் - 2-3 கப்
நெய் - 1.5 முதல் 2 தேக்கரண்டி
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி - 8-10
திராட்சை - 1.5 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை;
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
அதில் முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் அவலைச் சேர்த்து, லேசாக வறுத்து எடுக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரையை மிதமான தீயில் வைத்து கரைக்கவும்.சர்க்கரை கரைந்ததும் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.பிறகு காய்ந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.பால் தண்ணியாக இருந்தால் சிறிது முந்திரியை 10 நிமிடம் ஊறவைத்து அரைத்து சேர்க்கவும்.
வறுத்த அவல் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
அவல் நன்கு மென்மையாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்து பரிமாறவும்.
#🍲✨ கோலு ஸ்பெஷல் ரெசிபி 🪔🌸 #🥘All in All கிச்சன் #🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி #👶கிட்ஸ் - ஸ்பெஷல் ரெசிபி #👩🏼🍳 சமையல் குறிப்பு வீடியோஸ்
