#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
எழுத்தாளர் ஜோசப் கொன்ராட் பிறந்த தினம் இன்று.
ஜோசஃப் கான்ராட் (Joseph Conrad, டிசம்பர் 3, 1857 – ஆகஸ்ட் 3, 1924) ஆங்கில எழுத்தாளர். தற்கால உக்ரைனில்ஒரு போலந்தியக் குடும்பத்தில் பிறந்த கொன்ராட் பின்னர் பிரிட்டானியக் குடியுரிமை பெற்றார்.
தனது இருபது வயதுக்குப் பின்னரே ஆங்கில மொழியைக் கற்ற கொன்ராட், ஆங்கிலத்தில் பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அவருடையப் படைப்புகள் கடல், கப்பல் வாழ்க்கை ஆகியவற்றையே பெரும்பாலும் களமாகக் கொண்டுள்ளன. கடமையுணர்வும், விசுவாசமும் மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் இவருடைய புதினங்களிலும், சிறுகதைகளிலும் கருபொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டானியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கொன்ராடின் படைப்புகள், அதன் தொலைதூரப் பிரதேசங்களை ஆளும் அதிகாரிகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன. கொன்ராடின் உரைநடைத் திறன் புகழ்பெற்றது. ஆங்கில இலக்கிய உலகு அதுவரை கண்டிராத சோக யதார்த்தவாதச் சூழலை ஆங்கிலப் புதினப் படைப்புச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியவர் கொன்ராட். அவருடைய கதை சொல்லும் பாணியும், எதிர் நாயக கதை மாந்தரும் பல பிற்கால எழுத்தாளர்களுக்கு தாக்கங்களாக அமைந்துள்ளன.
கொன்ராடின் படைப்புகள் உலகெங்கும் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன; அவை பல திரைப்படங்களின் திரைக்கதைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

