ShareChat
click to see wallet page
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.10.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திரேதா யுகம் தொடர்ச்சி =========================== அகிலம் ====== சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத் தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள் அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே என்று மடமாது ஏற்ற தினகரரை நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே . விளக்கம் சீதாதேவி திருமண வயதை எய்தினாள். சீதையின் மாதாவின் மனமோ மகளின் மணக்கோலம் காண மனாட்டமானது. எனவே, கணவன் தினகரனாம் ஜனகனிடம் தம் எண்ணத்தை இதமாக எடுத்துரைத்தாள். தினகரனோ சற்று யோசித்தார். என்ன யோசிக்கிறீர்கள் என வினவினாள் மனைவி. . . அகிலம் ======= வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும் அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும் பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக் கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான் பண்டு உனக்குப் பரம சிவனாரும் வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச் செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால் பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே . விளக்கம் ========== மனைவியின் வினாவிற்கு, வில்லை வளைத்தவருக்கல்லவா நம்முடைய மகளை மணமுடித்துக் கொடுக்கவேண்டும் என்று விடையளித்த தினகரன், உடனே கலைக்கோட்டு மாமுனிவரை அங்கு வரவழைத்தான். அவருக்குத் தன்னுடைய மகள் மற்றும் வில்லின் விவரங்களை எடுத்துக்கூறி இதற்கு என்ன உபாயம் செய்ய வேண்டும் என வேண்டினார். . அதைக் கேட்ட கலைக்கோட்டு மாமுனிவர், தினகரனாகிய ஜனக மகாராசனைப் பார்த்து, மன்னா இந்த மண்ணுலகில் காலங்காலமாக அரசர்களையும் இங்கே வரவழைத்து அவர்களிடம் என் மகளோடு பிறந்த இந்த வில்லை, எந்த மாமன்னன் வளைக்கிறாரோ அவருக்கு என் மகளை மணமுடித்துத் தருகிறேன் என்று அறிவித்துவிடுங்கள். தங்களின் அறிவிப்பின்படி யார் அந்த வில்லை எடுத்து வளைக்கிறாரோ அவருக்கே உங்கள் மகளை மணமுடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார். . அவர் செல்லும் வழியில், ராமபிரானை போய் சந்தித்தார். மாமுனிவரின் வருகையால் மகிழ்ந்த ராமரிடத்தில் கலைக்கோட்டு மாமுனிவர் ராமா உனக்கு ஒரு வில்லை வளைப்பதின் மூலமே திருமணம் நடைபெறவேண்டுமென்று பரமசிவனார் விதிப்பயனை விதித்துள்ளார். . அதற்கேற்ப இப்போது தினகரன் என்னும் ஜனகராஜனின் மகளுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே இப்பொழுது நீ சென்றால் உடனே உன் விதிப்பயன் நிறைவேறும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். . . அகிலம் ======== அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம் மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும் இராவண சூரன் இராமர்முத லானவரும் இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம் வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல் முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார் இராம ரெடுத்து இராம சரமேற்றி சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே . விளக்கம் ======== கலைக்கோட்டு மாமுனிவரின் ஆலோசனைப்படியே ஐம்பத்து ஆறு தேசத்திலுள்ள அரசர்களுக்கும் தினகரன் செய்தியனுப்பினார். அதற்கிணங்கி தன்னிகரில்லா மன்னர்கள் யாவரும் உயர் சாதியாகிய உத்தம தர்மவான்களும் தெய்வேந்திரனும், இராவணனும், இராமகுலமாகிய வானவர்களும் வருகை தந்து அமர்ந்தார்கள். . சபை நடுவே வைக்கப்பட்டிருந்த வில்லில் வீராதி வீர்ர்களான தேசாதி தேசமன்னர்களெல்லாம் நாண் ஏற்ற முயன்றார்கள். வில்லை நகர்த்தவே முடியாமல் நாணி நின்றார்கள். அதிலே சிலர் வில்லை எடுத்தார்கள். வளைத்து நாண் ஏற்ற முடியாமல் முகவாட்டமானார்கள். அத்தகையோரின் வரிசையில் இராவணனும் ஒருவன் என்பது குறிப்படத்தக்கதாகும். . இத்தகைய நிலையிலான வில்லை எடுத்தார் இராமபிரான். தொடுத்தார் சரத்தை, வில்லை இராமபிரான் வளைத்தபோது வேல்வழியாள் சீதையின் மனமும் இராமர்பால் வளைந்தது செல்வன் அந்த இராமன் சீதையை மணம் முகித்தார். . மங்கள கீதங்கள் முழங்க வானோர் மனமகிழ, மணமுகித்த சீதைத் திருமாதைக் கரம்பிடித்த களிப்போடு இராமபிரான் தன் பெற்றோர்களோடும் தம்பியர்களோடும் ஏனைய அரச பாரம்பரியம் பரிவாரங்களோடும் அயோத்தியாபுரியை வந்தடைந்தார். . . தொடரும்… அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
Ayya Vaikundar - ShareChat

More like this