நினைவோ ஒரு பறவை
நினைவுகள் என்பது மனித அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அது நமது உணர்வுகளை வடிவமைக்கிறது, நமது செயல்களுக்கு வழிகாட்டுகிறது. நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை ஆழமான வழிகளில் பாதிக்கும் ஆற்றல் கொண்டவை.
எண்ணங்கள் மூளையில் நரம்பியல் செயல்பாட்டின் வடிவங்கள் ஆகும். அவை கடந்த கால அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன.
ஒவ்வொரு தனிப்பட்ட சிந்தனையையும் நாம் அறிந்திருக்காவிட்டாலும், நம்பிக்கை, அவநம்பிக்கை, குறிக்கோள், கோபம், அன்பு, துவேஷம், ஆற்றாமை போன்ற ஏதாவதொரு பரிமாணதில் நம் மனதில் பதிந்து நமது செயல்களை பாதிக்கிறது.
நம் எண்ணங்கள் நம் மனதின் பிரதிபலிப்பாகும். நம் மனம் நம் வாழ்வின் பிரதிபலிப்பாகும். வெறி, எதிர்மறை சிந்தனைகள், கவலை, மனச்சோர்வு போன்ற மனநலம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எண்ணங்கள் காரணமாக அமைகின்றன.
நாம் நமது எண்ணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், நமது ஆழ்ந்த அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் பற்றிய நுண்ணறிவினைப் பெற முடியும், நம்பிக்கைகளை ஏற்படுத்தக்கூடிய ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்க்க முடியும்.
எண்ணங்களே நமது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் விதைகளாகும். ஒரு மாபெரும் பயணம் ஒற்றை எண்ணத்துடன் துவங்குகிறது.
நினைவுகள் என்பது நம்
அனுபவங்கள் மற்றும்
உணர்வுகளால்
வடிவமைக்கப்பட்ட
எண்ணங்களின் குழந்தைகள்.
காட்சிகள் மறைந்தாலும்
நினைவுகள் என்றும்
நிலைத்திருக்கும். நெஞ்சம் மறப்பதில்லை. நேற்று என்பது
இன்றைய நினைவு, நாளை
என்பது இன்றைய கனவு.
“Change your thoughts and you can change your world.”- Norman Vincent Peale.
எண்ணும் எண்ணங்கள் சரியாக இருந்தால், காணும் கனவுகள்
நிச்சயம் கைகூடும்.
- திரைபாரதி
Ninaivo oru paravai – I
https://www.amazon.in/dp/B0CNJDWC9H
Ninaivo oru paravai – II
https://www.amazon.in/dp/B0CWFQNM4S
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
00:10
