ShareChat
click to see wallet page
"எங்கு சத்தம் எழுப்பினால் அங்கு அதிருமோ அந்த இடத்தில் சப்தம் எழுப்ப விழைந்தேன். எனவே அங்கு வெடிகுண்டை வீசினேன். அது ஒரு போலி வெடிகுண்டு. அது சப்தம் மட்டுமே எழுப்பியது. யாரையும் காயப்படுத்த வில்லை. ஆனால் எல்லோரும் பயந்து ஓடி விட்டார்கள். மோதிலால் நேருவைத் தவிர. நான் ஒரு ராணுவ வீரன். நான் உங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யுத்தம் செய்திருக்கிறேன். எனவே என்னை பீரங்கி முனையில் கட்டி வைத்து கொல்லுங்கள். நான் நெஞ்சை பிளக்க தயாராக இருக்கிறேன் " என்று சொன்னதோடு , ராஜகுருவோடும் சுகதேவோடும் லாகூர் மரண கொட்டடிக்கு போகும்போது "என்னை கண்களைக் கட்டாமல் தூக்கிலேற்றுங்கள். நான் சாகும்போதும் இந்திய தாயை தரிசித்துவிட்டு கொண்டே சாவேன்" என்று வீர முழக்கமிட்ட சாகேத் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று.... நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம்... எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்' என்று முழங்கிவிட்டு தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டனர் அந்த மாவீரர்கள். அதில் முதன்மையானவரான தோழர் பகத் சிங்கின் பிறந்ததினம்... செப்டம்பர் 28 #மாவீரன் பகத்சிங் பிறந்தநாள்
மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் - ShareChat

More like this