*அன்றைய கால நிகழ்வுகள்..*
*அனைவருக்கும் நினைவிருக்கலாம்...*
மின்சாரம் போனால் வீடு முழுவதும் இருள் சூழும்...
உம்மம்மா தன் கையில் கண்ணாடி விளக்கை ஏற்றி, மெதுவாய் ஒளி பரப்புவாள்.
அந்த விளக்கின் மஞ்சள் ஒளி சுவரில் நடனமாட, அவள் பெருமையுடன் சொல்வாள்...
“என் காலத்துல இப்படி ஒளியே இல்ல புள்ளயாள்... " என்று அவளின் பழைய கதையை பேசத் தொடங்குவாள்.
அவள் சொல்லும் போது அது ஒரு அழகிய கதையாய் ஒலிக்கும்.
அந்த ஒளியின் நிழலில் நம்முடைய சிறு கைகள் ஆட, சுவரில் உருவாகும் நிழல் பொம்மைகளைப் பார்த்து சிரிப்போம்.
வீடு முழுதும் அமைதியும் ஒளியும் கலந்து
அந்த ஒரு தருணம் சொர்க்கத்தின் மென்மையாய் உணரப்படும்.
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

