விஜயுடன் பேசும் பல்வேறு கட்சிகள்
செங்கோட்டையன் இணைந்த உடனேயே, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என தகவல்கள் வெளியாகின. கடந்த தேர்தல்களில், SDPI டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்தது.
சில தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட SDPI.. கடந்த சட்டசபை தேர்தலில் அமமுக உடன் கூட்டணி வைத்தது. தற்போது மாறும் அரசியல் சூழ்நிலைகளில், SDPI - டிடிவி தினகரன் உடன் அப்படியே பயணம் செய்து.. இரண்டு தரப்பும் ஒன்றாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணையும் என்று கூறப்படுகிறது.
அ.ம.மு.க.வின் எதிர்கால நிலைப்பாடு குறித்தும் தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளன. தினகரன் சமீப காலமாக விஜய்க்கு ஆதரவாக பல அரசியல் விவகாரங்களில் செயல்பட்டு வருகிறார். திமுகவிற்கு - தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என்று அவர் பல இடங்களில் கூறி வருகிறார். இது, அ.ம.மு.க.வும் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்கலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் SDPI - அமமுக அப்படியே மொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கூட்டணி உருவானால், எதிர்க்கட்சிகள் முகாமில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.
ஓ பன்னீர்செல்வம் தனிக்கட்சி
இவற்றுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில் புதிய அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ளார். தனது அரசியல் மீள்வருகையை வலுப்படுத்த, அவரும் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனிக்கட்சி தொடங்கி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்று அவர் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளையில், அன்புமணி ராமதாஸ் தரப்பு பா.ம.க.வின் பிரிவினர், தமிழக வெற்றிக் கழக. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், எதிர்கால தேர்தல்களில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படுவதாக உள்விவரங்கள் தெரிவிக்கின்றன. பாமக இதனால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம்.
இந்த நகர்வுகள் அனைத்தும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய மற்றும் சக்திவாய்ந்த கூட்டணியை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதை உணர்த்துகின்றன. மூத்த தலைவர்கள், குறிப்பிட்ட வாக்கு வாங்கி உள்ள கட்சிகள் மற்றும் சிறிய அரசியல் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம், அவர் தனது கட்சியை அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு முக்கியமான சக்தியாக நிலைநிறுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தைகளில் பல ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டில் புதிய அரசியல் கூட்டணிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு மையப் புள்ளியாக மெதுவாக உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் மாதங்களில் இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணையும் என்பது குறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📖அரசியல் செய்திகள்📖 #இன்றைய அரசியல் செய்திகள்💐 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🤝பா.ம.க

