ShareChat
click to see wallet page
சுகா’ என்ற வடமொழிச் சொல்லுக்கு, கிளி என்று பொருள். கிளி முகம் கொண்ட மகரிஷி ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி. மஹாபாரதத்தை எழுதிய வியாசரின் மகனே ஸ்ரீ சுகப்பிரம்மம். மகாபாரதப் போர் நடைபெற்ற குருக்ஷேத்ரத்தில் ஹோமம் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வியாசர் கண்களில் அப்போது அங்கே வந்த கிருதாசீ எனும் மிக அழகிய தேவ கன்னிகை தென்பட்டாள். தன்னைக் கண்டு மனம் மயங்கிய வேத வியாசரின் மனதைப் புரிந்து கொண்ட அந்த தேவ கன்னிகை மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்க எண்ணி, தனது உருவை மாற்றிக் கொள்ள முயல, அப்போது ஆகாயத்தில் கிளிகள் பறந்துகொண்டு இருந்தன. உடனே அவள் ஒரு பச்சைக் கிளியாக மாறி அக்கூட்டத்தில் கலந்து விட்டாள். கிருதாசீ தனது சுய உருவை அடைந்தபோது தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். அவளுக்குக் கிளி முகத்துடன் கூடிய ஒரு பிள்ளை பிறந்தான். அந்தப் பிள்ளையை தேவலோகத்திற்குச் கொண்டு செல்ல முடியாதாகையினால் கிருதாசீ அக்குழந்தையை வியாசரிடம் ஒப்படைத்தாள். குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. இவர் தனது தாயின் சாயலை முகத்தில் தாங்கியவர். தாயின் சாயலைப் பெற்ற மகனும், தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்பது ஆன்றோர் வாக்கு. பிறந்த குழந்தையை கங்கை நீரில் ஸ்நானம் செய்ய, உடனே பச்சிளம் குழந்தையாக இருந்த சுகர், அக்கணமே ஒரு சிறுவனாக மாறினார். வியாசரின் அறிவும் ஞானமும் ஒருங்கே சுகருக்கு கிடைத்தது. வியாசரிடமே வளர்ந்த சுகப்பிரம்மம் பிரம்மசரிய விரதம் கடைப்பிடித்தார். ஒரு நாள் சுகப்பிரம்மத்தைக் காணாமல் வியாசர் சுகா, சுகா என குரல் கொடுத்து அழைத்தார். சுகரே பிரம்மம் என்பதால் சுற்றிலும் இருந்த மரம், செடி, கொடிகள், புல் பூண்டு என அனைத்தும், ‘என்ன என்ன’ என்று கேட்க, அதில் சுகர் குரலைக் காணாததால் மீண்டும் தேடிக்கொண்டே நடந்து ஒரு ஆற்றின் கரையினை நோக்கி நடக்கத் தொடங்கினார். அந்தக் கரையோரம் சுகர் நடந்து செல்வதைக் கண்டு வியாசர் அவரை அழைத்தவாறே பின்தொடர்ந்து சென்றார். அச்சமயத்தில் சில பெண்கள் அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். சுகர் அப்பெண்களைக் கடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து வியாசர் செல்ல, அப்போது குளித்துக் கொண்டிருந்த பெண்கள் வியாசரைப் பார்த்து பதறியவாறே கரையேறி தங்கள் உடலை ஆடைகளால் மறைத்துக் கொண்டார்களாம். இதைக்கண்டு திகைத்துப் போன வியாசர், சற்று முன்னால் வாலிபனான தனது மகன் சுகர் சென்றபோது பதறாமல் அமைதியாக இருந்த பெண்கள், வயதான மகரிஷியான தன்னைக் கண்டு பதறி ஆடைகளால் தங்கள் உடலை மறைத்துக் கொண்டதைப் பற்றி விசாரிக்க, அதற்கு அப்பெண்கள் “சுகர் ஒரு பிரம்மரிஷி. அவர் பார்வையில் ஆண் பெண் என எந்த பேதமும் இருக்காது” என்று பதிலுரைத்தார்களாம். வியாசர் மகாபாரத காப்பியத்தை எழுதி முடித்தார். ஆனாலும், அவருக்கு மன நிம்மதி கிடைக்கவில்லை. மனம் அமைதி பெற கண்ணனின் லீலைகளை எழுதுங்கள் என்று நாரதர் கூற, வியாசர் ஸ்ரீமத் பாகவதம் என்ற பெயரில் கண்ணனின் லீலைகளை எழுதினார். அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஹஸ்தினாபுரத்து மகாராஜாவாக ஆனபோது ஒரு சமயம் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த முனிவர் குடிலுக்குச் சென்று தாகத்திற்கு நீர் கேட்க, அது முனிவர் காதில் விழாததால் முனிவர் அமைதியாக இருந்தார். இதனால் கோபமுற்ற மன்னன் அங்கிருந்த செத்துக் கிடந்த ஒரு பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் இட்டார். இதைக் கண்ட அந்த முனிவரின் மகனோ, மன்னன் ஏழே நாட்களில் இறந்து விடுவான் எனச் சாபமிடுகிறான். இப்படியாக சாபம் பெற்ற பரீட்சித்து மகாராஜா தனது மகன் ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து பின்னர் கங்கைக் கரைக்குச் சென்று தவம் இயற்றினார். அப்போது அங்கு வந்தார் சுகப்பிரம்ம ரிஷி. மகாராஜா மோட்சம் பெறுவதற்காக ஸ்ரீமத் பாகவத கதைகளை ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தார். சதா சர்வ காலமும் பிரம்மத்திலேயே முழுமையாக லயித்த ஒரே ரிஷி சிவபெருமானுக்கு பிறகு இவர் ஒருவர் மட்டுமே. சுகர் அபார பிரம்மஞானம் மிக்கவராய் தந்தையை மிஞ்சி மனதில் சிறிதளவும் கலங்கமில்லாதவராய் விளங்கினார். இத்தகைய பெருமைகள் பல பெற்ற சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டால் நம் வாழ்க்கையில் அளவற்ற செல்வமும் நல்வாழ்வும் கிடைக்கும். Advertisement parrotsVyasarSugabramma maharishi Show Comments Advertisement Advertisement Other Articles The boon received by Kaikeyi கைகேயியின் கை கட்டை விரல் இரும்பாக மாறிய ரகசியம் தெரியுமா? கல்கி டெஸ்க் 02 Oct 2025 Basara gnana saraswathi பாசரா சரஸ்வதி கோயில்: கல்வி, கலையில் உச்சம் தொட வைக்கும் மஞ்சள் பிரசாதம்! வி.ரத்தினா 30 Sep 2025 brown sugar vs white sugar பழுப்பு சர்க்கரை vs வெள்ளை சர்க்கரை - எது ஆரோக்கியமானது? பலருக்கும் ஏற்படும் குழப்பம்! சேலம் சுபா 23 Sep 2025 Birds that talk like humans அடடா! கொஞ்சிக் கொஞ்சி 'பேசும் பறவை'களா? என்னது, பறவைகள் பேசுமா? எம். ஆர். ஆனந்த் 18 Sep 2025 Advertisement true incident of Sai Baba ஆன்மிகம் ஷீர்டி சாயிபாபாவுக்கு வந்த கோர்ட் சம்மன்! ச. நாகராஜன் ச. நாகராஜன் Published on: 04 Oct 2025, 7:15 pm துலியா நகர் மாஜிஸ்ட்ரேட்டிற்கு முன்னால் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒருவன் நகைகளைத் திருடி விட்டான் என்பதே அந்த வழக்கு. அந்த நகைகளை வைத்திருந்தவனோ அவற்றை ஷீர்டி சாயிபாபா தான் தனக்குக் கொடுத்தார் என்றான். “அவரையே கேட்டுப் பாருங்கள். அவர் தான் இதற்கு சாக்ஷி” என்றான் அவன். அனைவரும் திகைத்தனர். மாஜிஸ்ட்ரேட்டிற்கு வேறு வழி இல்லை. அவர் ஷீர்டி சாயிபாபாவிற்கு சம்மனை ... மேலும் படிக்க Buddha ஆன்மிகம் புத்தர்… ! ஆர். சத்திய நாராயணன் Published on: 04 Oct 2025, 5:25 pm புத்தர் ராஜ பரம்பரையில் பிறந்தவர். அவர் பிறந்த உடன் ஜோசியர் ஒருவரிடம் புத்தரின் ஜாதகத்தை கொடுத்து, புத்தரின் தலையெழுத்து எப்படி இருக்கும்? என்று கேட்டார் ராஜா. ஜோசியர், புத்தர் தனது இளம் வயதிலேயே சன்யாசி ஆகி விடுவார் என்று சொன்னார். இது போதாதா… ? பெற்றோர் ஜாக்கிரதை ஆனார்கள். அவருக்கு அதாவது புத்தருக்கு வாழ்வில் உள்ள எந்த கஷடத்தையும் அவர் தெரிந்து கொள்ளக் கூடாது என்று திட்டம் போட்டு ... மேலும் படிக்க Saturday Perumal Worship ஆன்மிகம் புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை வழிபடுவதற்கு உகந்த நாளானது எப்படி? கல்கி டெஸ்க் கல்கி டெஸ்க் Published on: 03 Oct 2025, 5:00 pm வாரத்தின் ஏழு நாட்களில் பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் சனிக்கிழமைதான். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகள் என்றால் அதன் விசேஷமே தனிதான். ஒரு புரட்டாசி சனிக்கிழமை நன்னாளில், திருவோண நட்சத்திரம் கூடிய தினத்தில்தான் எம்பெருமான், ஏழுமலையின் மீது ஆவிர்பவித்ததாக பல ஆசார்ய பெருமக்கள் நமக்குக் காட்டித் தந்திருக்கிறார்கள். சனிக்கிழமை திருமால் வழிபாட்டுக்கு உகந்த நாளாக எப்படி மாறிபோனது என்ப ... மேலும் படிக்க Tirupati Perumal Temple ஆன்மிகம் திருமலை வேங்கடாசலபதி கோயில் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? கல்கி டெஸ்க் கல்கி டெஸ்க் Published on: 03 Oct 2025, 4:13 pm நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் புகழும் செல்வமும் கொழிக்கும் திருத்தலமாக விளங்குவது திருமலை திருப்பதியாகும். பல்லவ, சோழ மன்னர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பல்வேறு திருப்பணிகளைக் கண்ட இத்திருத்தலம் ஏராளமான பெருமையும் புகழும் பெற்றதாகும். இத்திருக்கோயில் குறித்து சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம். 1. திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயில் விஜயநகர பேரரசின் மன்னரான ... மேலும் படிக்க Muttu thengai vazhipadu ஆன்மிகம் ஒரே அடியில் தேங்காய் உடைந்தால் அதிர்ஷ்டமா? முட்டுத் தேங்காய் வழிபாட்டின் சூட்சுமம்! கே.எஸ்.கிருஷ்ணவேனி கே.எஸ்.கிருஷ்ணவேனி Published on: 03 Oct 2025, 3:38 pm பூமிக்குள் விளையும் பொருட்களை, ‘அகந்த மூலம்’ என்றும், மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை, ‘கந்த மூலம்’ என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அகந்த மூலமானது மனிதனுக்கு தாம்ச குணத்தையும், கந்த மூலம் சத்வ குணத்தையும் உருவாக்கும். காலம் காலமாகவே நம்முடைய வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றி விட்டு, உள்ளிருக்கும் வெண்மையா ... #god
god - ShareChat

More like this