ShareChat
click to see wallet page
#வம்பா ஸ்டில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! #🤩இன்றைய காமெடி🤣 *🚨 காலை தலைப்புச் செய்திகள்..! 🗞️* 📰 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.. தலைவர்களின் தேர்தல் சுற்றுப் பயணகள் சூடு பிடித்துள்ள நிலையில் எம்பிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை... 📰 அமெரிக்க அமைச்சருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.. கூடுதல் வரி, ஹெச் 1 பி விசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்... 📰 பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன்பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு... அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என தகவல் 📰 ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு ஒன்றிய அரசு மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என மம்தா பானர்ஜி கருத்து... அடுத்த மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு மாற வாய்ப்புள்ளதாக கேரள நிதி அமைச்சர் எச்சரிக்கை.. 📰 தெலங்கானாவில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத நிறுவனத்தை சூறையாடிய வடமாநில தொழிலாளர்கள்.. பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போலீசாரையும் துரத்தி, துரத்தி தாக்கியதால் பரபரப்பு. 📰 உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி சாதித்த போட்ஸ்வானா...வரும் 29-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து கொண்டாடும் போட்ஸ்வானா அரசு... 📰 வெப் தொடரில் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை பயன்படுத்தியதாக புகார்... தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டால் நடிகர் ரன்பீர் கபூருக்கு சிக்கல்... 📰 ஆப்கனில் இருந்து விமானத்தின் முன் சக்கரத்தில் ஒளிந்து டெல்லி வந்திறங்கிய 13 வயது சிறுவன்.. வந்த விமானத்திலேயே காபூல் நகருக்கு அனுப்பி வைத்த உயர் அதிகாரிகள்... 📰 மத்திய பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் உயிருடன் மீட்பு... 📰 மைசூரு தசரா தொடக்க விழா கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து எரிச்சலடைந்த முதலமைச்சர் சித்தராமையா.. உட்கார முடியாதவர்கள் எதற்காக வரவேண்டும் என காட்டம்... 📰 மறைந்த அசாம் பாடகரின் உடலுக்கு இன்று 2-வது முறையாக உடல் கூராய்வு.. உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4-வது உலக பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு. 📰 மறைந்த அசாம் பாடகரின் உடலுக்கு மக்கள் திரளாக அஞ்சலி. உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4-வது உலக பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு..
வம்பா ஸ்டில் - ShareChat

More like this