#காலை வணக்கம் #சன் தலைப்புச் செய்திகள் *இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ தமிழ்நாட்டிக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கும் பாஜக -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
🗞️ திருச்சி துறையூரில் இபிஎஸ் பரப்புரை செய்யவிருந்த பகுதி வழியே சென்ற ஆம்புலன்ஸ். ஓட்டுநர், உதவியாளரை தாக்கிய அதிமுகவினர், ஆம்புலன்ஸை விரட்டியடித்ததால் பரபரப்பு
🗞️ VP தேர்தலில் சந்திரபாபு நாயுடுவே சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிப்பார். மண்ணை நேசிப்பவராக இருந்தால் சந்திரபாபு மனம் மாற வேண்டுமென செல்வப்பெருந்தகை கருத்து
🗞️ விலை குறைவாகக் கிடைக்கும் இடத்திலேயே கச்சா எண்ணெய் வாங்குவோம் என இந்தியா உறுதி. அமெரிக்காவின் வரி விதிப்பு அநீதியானது என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் சாடல்.
🗞️ சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு. 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு 400 ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக விலையேற்றம் #ரெங்கா! #renga-vamba!

