ShareChat
click to see wallet page
*05, டிசம்பர் 1896* சென்னையிலுள்ள கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) வாசகர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. கன்னிமரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி ராபர்ட் போர்க் கன்னிமரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara) என்பவராவார். இது இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். 1890-ல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. 1948-ம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று. 1981-ம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது. நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. 1973 ம் ஆண்டு இந்த நூலக வளாகத்தில் புதிய விரிவாக்க கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat

More like this