ShareChat
click to see wallet page
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.டிசம்பர். 5 இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று. மொசார்ட் (ஜனவரி 27, 1756 - டிசம்பர் 5, 1791) ஒரு புகழ்பெற்ற சிறந்த ஐரோப்பிய இசையமைப்பாளர் ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர். மொசார்ட் இளம் வயதிலிருந்தே தமது திறமையை காட்டி வந்துள்ளார். கிளபத்திலும் வயலினிலும் தேர்ந்த மொசார்ட் ஐந்தாம் வயதிலேயே இசைத் தொகுக்கத் தொடங்கி ஐரோப்பிய அரச குடும்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 17ஆவது வயதில் சால்சுபர்கு அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அமைதியுறாது பல இசையாக்கங்களை தொகுத்தவாறு மேலும் உயர்நிலைக்காக தேடி அலைந்தார். இவ்வாறு 1781இல் வியன்னா சென்றபோது, சால்சுபெர்கில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் எவ்வித நிதி ஆதாரமுமின்றி தலைநகரில் வாழ்ந்திருந்த மொசார்ட்டின் புகழ் பரவலாயிற்று. வியன்னாவில் அவரிருந்த கடைசி நாட்களில் அவருடைய பல புகழ்பெற்ற ஒத்திசைகள், ஆப்பெராக்கள், கான்செர்டோக்களை எழுதினார். இளம் அகவையிலேயே ஏற்பட்ட அவரது மரணம் குறித்து பல கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவர் இறக்கும்போது கான்சுடான்சு என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர். 600க்கும் மேற்பட்ட இசைவாக்கங்களை அவர் தொகுத்துள்ளார்; இவற்றில் பல ஒத்திசை, இசைக்கச்சேரி, அரங்கவிசை, ஆப்பெரா, குழுவிசை வகைகளில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. பன்னெடுங்காலமாக போற்றப்படும் செவ்விசை இசைத்தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். பிற்காலத்திய மேற்கத்திய இசையில் இவரது தாக்கம் அளவிடற்கரியது. தமது துவக்க கால இசைவாக்கங்களை பேத்தோவன் மொசார்ட்டின் பாணியிலேயே இயற்றினார். "இத்தகைய திறமையை இன்னமும் நூறு ஆண்டுகளுக்குக் காணவியலாது" என சமகால இசையமைப்பாளர் ஜோசப் ஹேடன் எழுதினார் மொசார்ட் ஜனவரி 27. 1756 அன்று ஆஸ்திரியாவில் சால்சுபர்கு சமத்தானத்தில் பிறந்தார் . இவரின் தந்தை பெயர் லியோபோல்ட் மொசார்ட். இவரின் தாயார் பெயர் அன்னா. இந்த இணையருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் இவரே மிக இளையவராவார். இவரின் அக்கா பெயர் மரியா அன்னா வால்பர்கா இக்னேசியா. மொசர்டின் அக்காவை செல்லமாக "நானெல்" என அழைப்பார். மற்ற ஐந்து குழந்தைகளும் இளம் வயதிலேயே அம்மைநோயினால் இறந்தனர். மொசார்ட்டுக்கும் பதினைந்தாம் வயதில் அம்மைநோய் ஏற்பட்டு ஒரு வருடத்தில் குணமடைந்தார். 1787 இல் ஆஸ்திரிய-துருக்கி யுத்தம் நடைபெற்றதால் மொசர்டும் மற்றும் பல இசைக்கலைஞர்களும் கச்சேரிகள் நடத்துவதை விட்டுவிட்டனர். இக்காலகட்டத்தில் மொசார்ட் மிகச்சிறந்த சிம்பொனிகளை உருவாக்கினார். சிம்பொனி எனும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் இசைசேர்க்கை என்று பொருள். 1791 இல் மொசர்டின் உடல் நிலை மோசமானது. 1791 டிசம்பர் 5ஆம் தேதி அவர் காலமானார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat

More like this