*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🤘🔔 ௐ 🔔🤘🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 கார்த்திகை: 𝟭𝟴._ 🇮🇳 ꧂_*
*_🌼 வியாழன்- கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟰•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●●ೋೋ•●●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️அஸ்வினி : சுபிட்சம் உண்டாகும்.
⭐️பரணி : வெற்றிகரமான நாள்.
⭐️கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
*════════════════*
*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
மனதில் ஒருவிதமான குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சலுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் உழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️கிருத்திகை : கோபமின்றி செயல்படவும்.
⭐️ரோகிணி : உழைப்பு மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
*════════════════*
*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். வெளியூர் நபர்களின் மூலம் தொழிலில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றத்தின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்கள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
⭐️திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
⭐️புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*════════════════*
*_🔯 கடகம் -ராசி: 🦀_*
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். ஓய்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️பூசம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️ஆயில்யம் : காரியங்கள் ஈடேறும்.
*════════════════*
*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கையான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மகம் : முடிவு கிடைக்கும்.
பூரம் : இன்னல்கள் நீங்கும்.
⭐️உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
*════════════════*
*_🔯 கன்னி -ராசி: 🧛♀️_*
பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் படிப்படியாக குறையும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
⭐️அஸ்தம் : விரயங்கள் ஏற்படும்.
⭐️சித்திரை : கவலைகள் குறையும்.
*════════════════*
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். முன்கோபத்தை குறைத்து கொள்வதால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
⭐️சித்திரை : அனுசரித்து செல்லவும்.
⭐️சுவாதி : நம்பிக்கை மேம்படும்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
*════════════════*
*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.
⭐️விசாகம் : உதவி கிடைக்கும்.
⭐️அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️கேட்டை : முடிவு கிடைக்கும்.
*════════════════*
*_🔯 தனுசு -ராசி: 🏹_*
குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.
⭐️மூலம் : ஒற்றுமை மேம்படும்.
⭐️பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️உத்திராடம் : முடிவு கிடைக்கும்.
*════════════════*
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். தவறிப்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணைய வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். நிறைவான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️உத்திராடம் : ஆதாயம் அடைவீர்கள்.
⭐️திருவோணம் : நெருக்கம் உண்டாகும்.
⭐️அவிட்டம் : திறமை வெளிப்படும்.
*════════════════*
*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
பெரியவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
⭐️அவிட்டம் : நம்பிக்கை உண்டாகும்.
⭐️சதயம் : நெருக்கடியான நாள்.
⭐️பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
*════════════════*
*_🔯 மீனம் -ராசி: 🐠_*
பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் உடனிருப்பவர்களால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிடிவாத குணத்தினை மாற்றி கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.
⭐️பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️ரேவதி : தீர்வு கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️

