ShareChat
click to see wallet page
தமிழின உணர்வாளர், சமத்துவ சிந்தனையாளர், திருக்குறள் பற்றாளர், திராவிட இயக்க படைப்பாளி, இயக்குனர் அய்யா வி.சேகர் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாதது. வணிக படைப்புகள் கொடுக்கும் திரைப்பட வெற்றிகளுக்கு ஈடாக கொள்கைப் படைப்புகளின் வழியே சாதித்துக் காட்டியவர். எளிய மக்களின் மொழியில் முற்போக்கு கருத்துகளை தன் படைப்புகளின் வழியே சொன்னவர். புரட்சிகர கருத்துகளை எளியோருக்கும் சென்றடையும் படியாக திரைப்படங்களை உருவாக்கியவர். அவரது மறைவு அதிர்ச்சியளித்தது. அவருக்கு மே17 இயக்கத்தின் சார்பாக இறுதிமரியாதை செய்து புகழ்வணக்கம் செலுத்தினோம். உங்கள் படைப்புகள் உங்களது சிந்தனைகளை காலமெங்கும் சொல்லிக்கொண்டிருக்கும். #வி‌ சேகர் #மறைவு #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #✍️மே17 இயக்கக் குரல்
வி‌ சேகர் - ICO ICO - ShareChat

More like this