ShareChat
click to see wallet page
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று டிசம்பர் 5 விடுதலைப் போராட்டவீரர் பாகாஜதீன் பிறந்த தினம் இன்று, விடுதலை வீரர்களைப் போற்றுவோம்! உண்மையான வங்கப்புலி! மறைநிலை வீரர் / பின்னணிச் செயல்வீரர் !! [ UNSUNG HERO] வங்காள வரிப்புலிதான் ‘பாகாஜதீன்’ என்றழைக்கப்பட்ட ஜதீந்திரநாத் முக்கோபாத்யாயா. வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திலுள்ளது கோயா கிராமம். இதை ஒட்டி கோடுய் என்ற நதி ஓடுகிறது. அந்த நதிக்கரையில் புதர்மறைவிலிருந்து வந்த ஒரு பெரிய புலி, ஜதீன் என்ற வாலிபன் மேல் பாய்ந்தது. இடுப்பிலிருந்து சிறு கத்தியின் துணையுடன் அப்புலியுடன் போராடத் துவங்கினான் ஜதீன். ஏறத்தாழ இருபது நிமிடங்கள் நடந்த அந்தப் போராட்டத்தில் ஜதீன், புலி இருவருக்குமே ரத்தம் வடிந்தது. இறுதியில் புலியை வென்றான் ஜதீன். ஒன்பதடி நீள வங்காள "ராயல் டைகர்" செத்து விழுந்தது. பலத்த காயங்களுடன் ரத்தம் வழிய எழுந்த ஜதீனை மக்கள் பாராட்டி அவனுக்கு '‘புலியைக் கொன்றவன்’' என்று பொருள்படும் ‘பாகாஜதீன்’ எனப் பெயரிட்டனர். பாகாஜதீன் கொல்கொத்தா கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். சிகிச்சையளித்த மருத்துவர் சுரேக்ஷ் சர்வாதிகாரி, புலி கடித்த காயம், காலில் ஆழமாக இருந்ததால் காலை வெட்டி எடுத்தால்தான் பிழைப்பான் என்றார். ஆனால் ஜதீன் காலை வெட்டி எடுக்க ஒப்புக் கொள்ளவில்லை. தன் மனோபலத்தால் காலை எடுக்காமலேயே குணமடைந்தான் பாகாஜதீன். 05-12-1879 ஆம் தேதி பிறந்தவர் பாகாஜதீன். இளமைக்காலத்திலேயே பெற்றோரை இழந்தார். ஜதீனின் விதவைச் சகோதரி வினோத் பாலாதான் பெற்றோர் இல்லாத குறையைத் தீர்த்து வளர்த்தார். மல்யுத்தம், சிலம்பம், வாட்போர் போன்ற வீரவிளையாட்டுகளில் தேர்ந்து விளங்கினார் பாகாஜதீன். ஜதீனை ஈர்த்தவை! பாகாஜதீன் துடிப்புமிக்கவராக இருந்ததினால் அவர் கண்முன் நடந்த சில சம்பவங்கள், ஆங்கிலேயர்களின் மீது அளவற்ற வெறுப்பு ஏற்படக் காரணங்களாக அமைந்தன. இத்தோடு ராக்ஷ்பிகாரி போஸ் போன்ற தலைவர்களின் உணர்ச்சி மிக்க பேச்சுகளும், கதர்க்கட்சி வீரர்களின் சுதந்திரப் போராட்டங்களும் ஜதீனை வெகுவாக ஈர்த்து, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட வைத்தன. விவேகானந்தரின் கொள்கை முழக்கங்களால் புத்துணர்வு பெற்ற ஜதீன், அரவிந்தரோடு சேர்ந்து தேசிய இயக்கங்களிலும் பங்கு கொள்ளத் துவங்கி, பிற்காலத்தில் அரவிந்தரின் வலது கரமாகவே விளங்கினார். இந்தா வாங்கிக்கோ! கொல்கொத்தாவில் உள்ள கோராபஜாரின் ஒரு பக்கம். கையில் ஒரு பிரம்புடன் நின்று கொண்டிருந்தார் ஒரு ஆங்கிலக் கனவான். அந்த வழியாகப் போகும் இந்தியர் ஒவ்வொருவரையும் அவர்கள் வயோதிகரா, பெண்களா, வாலிபர்களா என்று பாரபட்சமில்லாமல் ஒவ்வொருவர் தலையிலும் பிரம்பினால் ஒரு அடி அடித்து “வாங்கிக்கோ, முப்பத்தைந்து” என்று எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த ஜதீன் சற்றுநேரம் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆங்கிலேயனின் இந்தச் செயல் ஜதீனுக்கு எரிச்சலூட்டியது. விரைந்து சென்று அந்த ஆங்கிலேயரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கி, அவர் தலையில் ஒரு அடி கொடுத்து “இந்தா! வாங்கிக்கோ! முப்பத்தெட்டு” என்றார். அந்த ஆங்கிலேயர் ஜதீனை எதிர்க்க முற்பட்டபோது, ஜதீன் அந்தப் பிரம்பாலேயே அவரை விளாசத் துவங்கியதும் அந்த ஆங்கிலேயர் ஓட்டமெடுத்தார். புரட்சி இயக்கத் தலைவரானார்! அலிப்பூர் சதிவழக்கில் யுகாந்தர் புரட்சி இயக்கத் தலைவர்களான அரவிந்த கோக்ஷ், அவரது சகோதரரான பரீந்திரநாத் கோக்ஷ் முதலானோர் கைதானதை அடுத்து, வங்காளப் புரட்சி இயக்கம், சரியான தலைவர் இல்லாத நெருக்கடிக்கு உள்ளானபோது ‘அனுசீலன் சமிதி’ என்ற புரட்சி இயக்கத்திற்குப் பாகாஜதீன் தலைவரானார். அலிப்பூர் சதிவழக்கில் பொய்சாட்சியங்கள் அளிக்க வைத்ததோடு, சில புரட்சி வீரர்களைச் சித்திரவதையும் செய்து வெறுப்பைத் தேடிக் கொண்ட சம்சுல் ஆலம் என்பவரை வீரேந்திரநாத் சுட்டுக் கொன்றார். அதே வழக்கில் அரவிந்தருக்கு எதிராக வாதாடிய வங்காள வழக்கறிஞர் அசுதோக்ஷ் பிஸ்வாசை சாருசந்திரபோஸ் சுட்டுக் கொலை செய்தார். இதற்கிடையே சார்லஸ் டெகார்ட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் சூழ்ச்சியால், சாரு சந்திரபோஸ் கொடுத்த வாக்குமூலத்தைப் பாகாஜதீனுக்கு எதிராக திருப்பி கொலை செய்யத் தூண்டியதாக இவ்விரு வழக்கிலும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 20-02-1910 அன்று கொல்கொத்தா மத்திய சிறைச்சாலையின் மைதானத்திலேயே ஜதீனின் வழக்கு விசாரணை துவங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி, போதுமான சாட்சியங்கள் இல்லாததாலும், சாருசந்திரபோஸ் சிறையில் கொடுத்த வாக்குமூலம் செல்லாது என்று கருதியதாலும் ஜதீனை விடுதலை செய்தார். ஆனால் வழக்கு நடந்த ஓராண்டில் சிறை வாழ்க்கையையும், சித்திரவதைகளையும் அனுபவித்த பாகாஜதீன் 21-02-1911ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார். ராணுவ அதிகாரிகளும் பாகாஜதீனும்: நண்பர் ஒருவரைச் சந்திக்க பாகாஜதீன் டார்ஜிலிங்கிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் இருந்த பெட்டியில் நான்கு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் ஏறினார்கள். ரயில் ஒவ்வொரு ஸ்டேசனில் நிற்கும்போதும், இந்த நால்வரும் ப்ளாட்பாரத்தில் இறங்கி, போவோர் வருவோரைக் கிண்டலும் கேலியும் செய்வதுமாக கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள். ஜதீன் இருந்த பெட்டியில் இருந்த ஒரு முதியவர் குடிநீருக்காக தவித்துக் கொண்டிருந்தார். அவருக்காக தண்ணீர் கொண்டு வர ஜதீன் சென்று விட்டு திரும்பும்போது அங்குமிங்கும் கூத்தடித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர் மீது சிறிது தண்ணீர் பட்டது. அந்த ஆங்கிலேயர் ஜதீனைத் தன் கைபிரம்பால் அடித்தார். ஜதீன் வேறொன்றும் பேசாமல் பெட்டியில் ஏறி முதியவரின் தாகம் தீர்த்து விட்டு மீண்டும் இறங்கினார். தன்னைப் பிடித்த அந்த ராணுவ அதிகாரியின் கையைப் பிடித்து ஒரு முறுக்கு முறுக்கினார் ஜதீன். அந்த அதிகாரி அலறினார். அதைக் கண்ட மற்ற மூவரும் அந்த அதிகாரியின் உதவிக்கு ஓடி வந்தனர். அவ்வளவுதான்! அந்த நான்கு ராணுவ அதிகாரிகளையும் ஜதீன் புரட்டி எடுத்து விட்டார். எழுந்திருக்கக் கூட வலுவற்று, அந்த நான்கு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளும் ப்ளாட்பாரத்தில் துவண்டு கிட *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - Freedom Fighter Oagha Oatin (1879 1915) ww Jaborejobcom Freedom Fighter Oagha Oatin (1879 1915) ww Jaborejobcom - ShareChat

More like this