#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 . . . ❤️❤️❤️________________________________
இன்றைய நவ நாகரீக உலகில் ஆண்கள்.. பெண்கள்.. மூன்றாம் பாலினத்தவர்கள் என யாவரும் அதிகமாக கவலைப்படுவதும்.. கவனம் செலுத்துவதும் தங்கள் கேசம் எனப்படும் தலை முடி வளர்ச்சியை பற்றி தான் என்றால் அது மிகையாகாது..!!
தலை முடி வளர்ச்சியை அழகு எனும் அமைப்பின் கீழ் நாம் வகைப்படுத்தினால்.. மனிதனின் புற அழகிற்கான காரக கிரகமாக சுக்கிரன் திகழ்கிறார்..!!
தலை முடி வளர்ச்சியில் தலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு..!!
அவ்வகையில்..
ஜோதிடத்தில் ஒருவரது லக்னமே தான் தலையாக கருதப்படுகிறது..!!
ஆக..
தலைமுடி வளர்ச்சிக்கு ஒருவரது லக்னமும் மிகப்பெரிய காரணியாக அமைகிறது..!!
கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் தான் தலை ராசி..!!
இங்கே கேசம் எனப்படுவது கேது கிரகத்தை குறிக்கும்..!!
அஸ்வினி மகம் மூலம் ஆகியவை கேதுவின் நட்சத்திரங்கள் ஆகும்..!!
அஸ்வினி எனப்படும் இருப்பது ஏழு நட்சத்திரங்களின் முதல் நட்சத்திரம் வீற்றிருப்பதும் மேஷ ராசியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது..!!
தலையை குறிக்கும் கிரகமாக சூரியன் விளங்குகிறது..!!
தலை முடி வளர்ச்சியில் சூரியனின் பங்கும் இன்றியமையாதது..!!
இந்த சூரியன் நீசமாவது (பலம் இழப்பது) அழகை குறிக்கும் சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது..!!
தலைமுடி வளர்ச்சிக்கு மயிர் காம்புகளின் பலம் மிக முக்கியமான அம்சம் ஆகும்..!!
அந்த மயிர் காம்புகளின் காரக கிரகமாக திகழ்வது மேஷத்தில் நீசமாகும் சனி பகவான் தான் எனும் போது தலை முடி வளர்ச்சிக்கு சனியின் பங்களிப்பு மிகவும் பிரதானமாது..!!
சனி பகவான் உச்சம் பெறுவது அழகின் காரக கிரகமான சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் தான் என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய சங்கதி ஆகும்..!!
தலை முடி வளர்ச்சிக்கு தோலின் தன்மையும் அதி முக்கியத்துவம் பெறுகிறது..!!
இங்கே..
தோல் மற்றும் அதன் ஆரோக்கியத்திற்கான கிரகம் புதன் பகவான் ஆவார்..!!
இவ்வாறாக. . .
லக்னம்.. சுக்கிரன்..சூரியன்.. கேது.. புதன்.. செவ்வாய்.. சனி என பல கிரகங்களின் கூட்டமைப்பின் பலம் தான் ஒரு ஜாதகரின் தலைமுடி வளர்ச்சிக்கு வித்திடுகிறது..!!
மேற்கூறிய கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ கர்ம கிரகங்களால் பாதிக்கப்பட்டாலோ.. நீசம் பெற்றாலோ.. ஜாதகருக்கு மிக நிச்சயமாக தலைமுடி உதிர்வும் வழுக்கையும் ஏற்படுகிறது..!!
பொதுவான ஜோதிட விதியாக..
புதன் ராகு/கேது/ சனி
சுக்கிரன் ராகு/கேது/சனி
சூரியன் ராகு/கேது/சனி
மேஷத்தில் சனி
விருச்சிகத்தில் சனி
மகரத்தில் செவ்வாய்
கும்பத்தில் செவ்வாய்
துலாத்தில் சூரியன்
லக்னத்தில் ராகு/கேது/சனி/ மாத்தி
இப்படியான கிரகச் சேர்க்கைகள் உள்ள ஜாதகர்கள் தலை முடி வளர்ச்சியில் பாதிப்பை நிச்சயமாக சந்திக்கிறார்கள்..!!
முறையான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ளும் அதே வேளையில்..
கொள்ளு பயிறை அவித்து விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் படைத்து மனம் உருகி வேண்டும் பட்சத்தில் மிக நிச்சயமாக கேசம் சார்ந்த பலவீனங்கள் குறைந்து நற்பலன்கள் கிட்டும்..!!
விநாயகர் அகவல் மற்றும் அனுமன் சாலிசா படித்து வருவதும் மிக நிச்சயமாக வியக்கத் தகுந்த பலன்களை தரும்..!!
நாமக்கல் ஆஞ்சநேயரும்..
பிள்ளையார்பட்டி விநாயகரும்..
கேச வளர்ச்சிக்கு வேண்ட உகந்த ஸ்தலங்கள் ஆகும்..!!
. . .
இந்த குரு வாரத்தில் எல்லோருக்கும் எல்லா வளங்களும் நீக்கமற நிறைந்து கிடைக்கட்டுமாக..!!
வாழ்க முடியுடன்..!!~❤️💖❤️

