ShareChat
click to see wallet page
தென்கிழக்கு வங்கக்கடலில் இந்தோனேசியாவின் பண்டா ஆச் பகுதிக்கு மேற்காக எதிர்வரும் 21/22 ஆம் திகதி ஒரு காற்றழுத்த பகுதி உருவாகவுள்ளது. இந்த காற்றழுத்தம் தொடர்ந்துவரும் நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாகவும் ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் மேற்பரப்பு வெப்பநிலையை அடிப்படையிலும் மேடன் ஜூலியன் அலைவின் செல்வாக்கு காரணமாகவும் இந்த நிகழ்வு ஒரு புயலாக உருப்பெற வாய்ப்புள்ளது. இதன்படி 25/26 ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்காக 500 கி.மீ தொலைவில் இது ஒரு புயலுருப்பெற சாத்தியமுள்ளது. மேற்கு நோக்கிய நகர்வு பின்னர் வட- மேற்காக மாற்றம்பெற்று தமிழக கடற்கரையை அண்மிக்கவும் ஏதுநிலை காணப்படுகிறது. இந்த கடல் நிகழ்வின் நாட்கள், அதன் பயணப்பாதை, அதன் வளர்ச்சிக்கட்டங்களில் மாற்றம் உருவாகும் என்பதை கருத்தில்கொள்க. இதன்காரணமாக ஏற்படும் மழை நிலைமை குறித்து அடுத்த பதிவில் பதியப்படும். நன்றி இயற்கையே இறைவன் #🌧️மழைக்கால மீம்ஸ்😆
🌧️மழைக்கால மீம்ஸ்😆 - மம்மாத இறுதியில் வங்கக்கடலில் பயல் சின்னம்? Visakhapatnam] Hyderabad 249 219 Belagavi 26.11.2025 199 Bengaluru 209 Madurai 229 Kotte 5=9 தமிழக/ ஆந்திர பகுதிநோக்கி வட நகர வாய்ப்பு மம்மாத இறுதியில் வங்கக்கடலில் பயல் சின்னம்? Visakhapatnam] Hyderabad 249 219 Belagavi 26.11.2025 199 Bengaluru 209 Madurai 229 Kotte 5=9 தமிழக/ ஆந்திர பகுதிநோக்கி வட நகர வாய்ப்பு - ShareChat

More like this