ShareChat
click to see wallet page
ஒரு நாள் நீங்க எழுந்திருக்க மாட்டீங்க. கிளாக் (Clock) அடிக்கறது நின்னு போயிடும். நீங்க வீணடிச்ச ஒவ்வொரு செகண்டும் போச்சு. உங்களை தடுத்து நிறுத்தின பயமெல்லாம் அர்த்தமில்லாம போயிடும். நீங்க கவலைப்பட்ட கருத்துக்கள் எல்லாம் மறந்து போயிடும். நீங்க துரத்தாம விட்ட கனவெல்லாம் உங்க கூடவே புதைக்கப்படும். அப்புறம் ஏன், ஏன் இன்னும் காத்துக்கிட்டு இருக்கீங்க? எல்லையில்லாத திறமையோட பிறந்த நீங்க, ஏன் உங்களை நீங்களே சந்தேகப்படுறீங்க? 'டைம்'ங்கிறது திரும்ப கிடைக்காத ஒரே விஷயம்னு தெரிஞ்சும், ஏன் தயங்குறீங்க? நீங்க சுவாசிக்கிற ஒவ்வொரு செகண்டும் ஒரு கிஃப்ட் (Gift). நீங்க எழுந்திருக்கிற ஒவ்வொரு நாளும் இன்னொரு சான்ஸ் (Chance). சரியான நேரத்துக்காக காத்துக்கிட்டு இருக்காதீங்க. செட்டில் ஆகாதீங்க. உங்களுக்கு எப்பவும் டைம் இருக்குற மாதிரி வாழாதீங்க. ஏன்னா, உங்களுக்கு எப்பவும் டைம் இல்லை. உங்களுக்குள்ள என்ன எரியுதோ, அதைப் போய் செய்யுங்க. எது உங்களை கூப்பிடுதோ, அதைப் போய் துரத்துங்க. யாரை நீங்க நேசிக்கிறீங்களோ, அவங்க கிட்ட போய் சொல்லுங்க. ஏன்னா, கடைசியில ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம்— நீங்க உண்மையாவே வாழ்ந்தீங்களா? இப்பவே போங்க, இன்னைக்கு ஒரு நல்ல நாளா மாத்துங்க. #ponrajpo #ponraj #motivation #Lifelession #TimeIsNow
ponrajpo - ShareChat
00:58

More like this