
२२ ह व्ह्यू · ६४४ प्रतिक्रिया | பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்து பிரபல பாலியல் குற்றவாளி சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் நேற்று இரவு 3 மணி அளவில். பாலியல் குற்றவாளி சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சொந்தமான லாரி ஒன்று பெட்டி பெட்டியாக போலி வாக்கு பதிவு இயந்திரங்களை இந்த கட்டிடத்திற்குள் கொண்டு வந்தது. கட்டிடத்தை வெளிப்புறமாக மறைவான இடத்திலிருந்து கண்காணித்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக தகவலை காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்தினார்கள். அக்கம் பக்கத்தில் இருந்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாகனத்தை சரியாக கட்டிடத்தின் வாயிலில் நிறுத்தி சத்தமாக கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்து கிராம மக்களும் உடனே கட்டிடத்தின் வாயில் பகுதியை வந்து அடைந்தனர். வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று சொன்னபோது வாயில் அருகே வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் காவலர்கள் அவர்களை தடுத்தனர். அதற்குள்ளாக காங்கிரஸ் தலைமை அனுப்பி வைத்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தை வந்து அடைந்தனர். அப்பொழுதுதான் அதிர்ச்சிகரமான மற்றொரு நிகழ்வை அவர்கள் கவனித்தனர். கட்டிடத்தை பாதுகாக்கும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் காவல்துறைக்கு தகவலை தெரியப்படுத்தினார்கள். ஆனால் காவலர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. பிறகு அனைவரும் லாரி டிரைவரை பிடித்து தாக்கியதும் சாவி கொடுக்கப்பட்டது. லாரியை திறந்த பொழுதுதான் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பெட்டி பெட்டியாக போலி வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதில் வாக்குப்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததும் அவர்கள் கண்டறிந்தனர்.. சம்பவ இடத்திற்கு விடியும் வரை காவல்துறையோ தேர்தல் அதிகாரிகளோ யாருமே வரவில்லை. பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்டனர் அதன் பிறகு காவலர்கள் வந்தனர். இந்த வாரம் தான் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறையில் இருந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டு அவர் தனது ஆசிரமம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. | ஜெயராமன் திமுக
