#📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள்
டிசம்பர் 7
'ஆண்பாவம்' படத்தின் 2ம் பாகம் உருவாகுமா? அல்லது இப்படத்தை ரீமேக் செய்து இயக்குவீர்களா?
பாண்டியராஜன் சாரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில்:
'ஆண்பாவம்' படம் என்பது ஒரு பொக்கிஷம். அது அப்படியே இருப்பதுதான் சிறப்பு. அதை ரீமேக் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. மேலும், 'ஆண்பாவம்' படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் எண்ணமும் எனக்கு இல்லை.
#ஆண்பாவம் என்ற படம் திரைக்கு வந்து இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 1985 டிசம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தை ஆர்.பாண்டியராஜன் இயக்கி நடித்தார். மேலும் ரேவதி, பாண்டியன்,சீதா, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, தவக்களை நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
#AanPaavam #Pandiyarajan
#40YearsOfAanPaavam

