#aanror chollay mathippom.
அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி! இறந்தவர்கள் நினைவாக மாதமொருமுறை அமாவாசை அன்று தர்ப்பணம் செய்கிறார்கள், ஏன்?
பதில்: அமாவாசை அன்று சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.
அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாகும், மூளைநோய் உள்ளவர்களைக் கட்டி வைக்க வேண்டிய அளவுக்கு வெறி அதிகப்படும், மரணத்தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரிந்து விடும்.
அந்த நாளைச் சிற்றின்பத்திற்குச் செலவு செய்வதோ, குழந்தைப் பேறு உண்டாவதோ நன்மையாக அமையாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகக் கூடும். ஏனெனில், நிலவு பூரணமாக ஒளி அற்ற நாளாகும் அது.
அதைப்போல பூரணச்சந்திர நாளில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அந்நாள்தான் பௌர்ணமி. அந்நாளிலும் மனித உடலில் அதிகமான சக்தி வந்து, விந்து நாதத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்துகிறது.
அந்நாளில் ஒரு குழந்தை உண்டானாலும் மனவளர்ச்சியில்லாத குழந்தையாக அது உருவாகக் கூடும்.
எனவே, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களைப் புனிதமான நாட்களாகவும், விரத நாட்களாகவும் மனதில் கொண்டு மதித்து இறைவனிடம் மனதைச் செலுத்தச் சொன்னார்கள்.
அமாவாசை நாட்களில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால்,
பூமியின் ஆகர்ஷணசக்தி அந்நாட்களில் அதிகரிக்கும். நம் ஒவ்வொருவரிடத்தும் இறந்துவிட்ட பெரியவர்களின் ஆற்றல் உள்ளடங்கியிருப்பதால், அந்நாட்களில் அவர்களை நினைக்கவும், நம் சக்தியை வீணாகச் செலவிடாது இருக்கவும், அந்நாளை நினைவு நாளாக வைத்து, பெரியவர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் விரத நாளாகவும் வைத்தார்கள்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹

