ShareChat
click to see wallet page
இன்று என்னுடைய அம்மாவின் 19 ஆம் ஆண்டு நினைவுதினம் என் வாழ்க்கையில் நான் சாகும் வரை மறக்க முடியாத ஒருநாள் இன்று நான் இப்படி இருப்பதற்கு ஒரு அடித்தளம் போட்டதே இந்த நாள் தான் என் அப்பா இறக்கும் போது எனக்கு ஒன்பது வயது தான் எனக்கு உடன்பிறந்தோர்கள் யாரும் இல்லை அப்போ அம்மா இருந்தாங்க னு ரொம்ப தைரியமாக இருந்தேன். அம்மாவை இழந்த அன்னைக்கு இரவு நான் தனியாக இருந்த அந்த நாள் தான் எனக்கு வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது.. எங்க அம்மா நினைப்பு என்னை வாட்டி எடுத்தது அவங்க கூட இருந்த அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு குடியேறினேன். எங்க அம்மா சாவில் இருந்து நான் வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு ஐந்து வருடத்திற்கு மேல் தேவைப்பட்டது நரக வாழ்க்கை வாழ்ந்தேன். தூக்கமின்மை பசியின்மை பட்டினி பின் தலைவலி கிட்டதட்ட உயிர் மட்டும் தான் உடம்பில் இருக்கும் நிம்மதி இல்லாத பிணம் போல திரிந்த நாட்கள் தான் என்னுடைய ஆசான்கள். அப்பா அம்மா இருந்தாலே நம்ம தலையில் ஏறி டான்ஸ் ஆடுகின்ற இந்தக் காலத்தில் அப்பா அம்மா உடன்பிறந்தோர்கள் யாரும் இல்லாமல் என் தலையில் ஏறி டான்ஸ் ஆடியவர்கள் நிறைய இருக்கிறார்கள். எப்போவும் ஒருவரைப் பற்றி குறை சொல்லும் போது நீங்கள் செய்ய பித்தாலாட்டம், நம்பிக்கை துரோகம் ஏமாற்றுவேலை, அதை எல்லாம் சொல்லிட்டு அவரைப் பற்றி குறை சொல்வது தான் ஒரு நல்ல தாய் வயிற்றில் பிறந்ததுக்கான அழகு. பண ஏமாற்றம், தனிமை, மனவேதனை இதை எல்லாம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் இந்த வலி தெரியும் வேதனை புரியும். அன்னைக்கு எனக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கும் நடக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆகவே உங்கள் பெற்றோர்களை மட்டும் நம்புங்கள் உங்களுக்கு மனதளவில் கூட துரோகம் நினைக்காத இரண்டு நல்ல உள்ளங்கள் உங்கள் பெற்றோர்கள் மட்டும் தான். என்னை அனாதை ஆக்கியது ஒரு சில நன்றிகெட்ட மனிதர்கள் தான் இவர்களைப் போன்ற உத்தம யோக்கிய சிகாமணிகள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடத்தால் தான் நான் இன்று வரை எவரிடமும் கையேந்தியது இல்லை சாகும் வரை என்னால் இப்படி தன்னம்பிக்கையுடன் வாழ முடியும். உங்க வாழ்க்கையிலும் இது போன்ற துரோகிகளை நீங்கள் நிறைய பார்த்து இருப்பீர்கள். அவனுங்களை எல்லாம் தப்பித் தவறி கூட நம்பி விடாதீர்கள். பிணம் தின்னும் கழுகைக் கூட நம்பலாம். ஆனால் தன்னை நல்லவனாக காட்டுவதற்கும் தான் செய்த தில்லுமுல்லு தனத்தை மறைப்பதற்கும் இன்னொருவனைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் குறை சொல்லும் ஈனப் பிறவிகளையும், நம்பிக்கை துரோகிகளை மட்டும் நம்பி விடாதீர்கள். இன்று வரை என் அம்மாவை நான் நினைக்காத நாளில்லை. பழையதைப் பற்றி நினைத்தாலே எனக்கு பின் தலை வலிக்கும். பழையதை மறக்கவும் முடியவில்லை அதை நினைத்து வேதனைப்படாமலும் இருக்கவும் முடியவில்லை. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை. வெளி உலகம் தெரியாமல் என்னை வளர்த்த என் அம்மாவுக்கும், அவங்க சாவு மூலம் தான் வெளி உலகத்தையும் உறவுகளையும் பற்றி நன்றாக தெரிய வைத்து விட்டார்கள். ஒருவருடைய மனக்குமுறலில் மட்டும் விழுந்து விடாதீர்கள் இந்தப் பாவம் எல்லாம் நீங்கள் சாகும் வரை உங்களை வாட்டி வதைத்துக் கொண்டு தான் இருக்கும். இது பாவத்திலே மிகப் பெரிய பாவமாகும். உயிருடன் இருக்கும் போது தெரியாத அருமையும், பெருமையும்... இறந்தப் பின்பு நிச்சயமாக தெரியும்... இது என்னுடைய அனுபவ உண்மை √ ஐ மிஸ் யூ அம்மா #momlife #mom #mommylife #ammalove #motherhood #motherlove #mother #motherandson #imissyou √ #அப்பா #அம்மா அப்பா #அம்மா #😢I miss You #imissyou amma appa i love you mama imissyou chellam
அப்பா - ShareChat
00:48

More like this