தேர்தல் ஆணையம் என்ன சொல்லுதுன்னா....
இப்போது உங்க கையில ஒரு form தந்திருக்கோம்.
2002 ல உள்ள பட்டியல பார்த்து நீங்க இந்த form-ஐ நிரப்பணும்.
சரி..இப்ப நம்ம கேள்வி என்னன்னா..
2002 ல இருக்குற பட்டியல் அப்படிங்கிறது என் வீட்டு அடுப்படில இருக்கா அல்லது தேர்தல் ஆணையத்துகிட்ட இருக்கா?
தேர்தல் ஆணயத்துகிட்ட இருக்கு..!
நம்ம விபரங்கள அவிங்கெளே ஆல்ரெடி வெச்சிகிட்டு, நாம சரியா எழுதுறமா இல்லியான்னு பரிசோதனை பண்ற வேலையா இப்ப நடக்குது?????
உன்னை நீயே எதுக்கு தேடுற?
அப்படிங்கிற மாதிரி எல்லா விபரத்தையும் அவங்களே வெச்சிகிட்டு, நீ சரியா அத பாத்து இந்த படிவத்துல எழுதுனா தான் நீ பாஸ்..இல்லைன்னா ஃபெயில்..அப்படின்னா என்னய்யா கதை இது ?
இப்ப நம்ம கையில் இருக்கிற Enumeration form தரும்போது மேலே நம்மோட பெயர், புகைப்படம், முகவரி எல்லாம் போட்டு தானே தர்றாங்க?
அதே மாதிரி 2002ல உங்க பெயர் இதோ..உங்க epic no.இதோ .. உங்க வார்ட் எண் இதோ..
அபப்டின்னு அதையும் அவன் தானே இந்த form ல தரணும்?
இத பாத்து எல்லாம் சரியா இருக்கா..பிழை இருக்கா.. யாராவது இந்த காலகட்டத்துல இறந்திருக்காங்களா..
அப்படின்னு சரி பார்த்து, புதிய புகைப்படம் ஒட்டி கையெழுத்து போட்டு குடுங்க அபப்டின்னு சொன்னா..ஒரு லாஜிக் இருக்கு.
பட்டியல நாங்க வெச்சிருப்போம்.
நீ வந்து அத பாத்து எழுதி அனுப்பு...
ஒழுங்கா பாத்து எழுத தெரியாதவனுக்கு இனிமே ஓட்டு இல்ல..அப்படின்னா இது சர்வாதிகாரமா இல்லையா? #🚨கற்றது அரசியல் ✌️

