#👉வாழ்க்கை பாடங்கள் #📝என் இதய உணர்வுகள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏நமது கலாச்சாரம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
மலைக்கோட்டை நகரில்
புதியதொரு வசந்தம்
காலையில் கதிரவன்
உதிக்கையில் மலர்ந்தது
அழகாய் தமிழர்
பெருங்கூட்டம் குழுமியிருந்தது
ஆதி தமிழன்
அடியேனும் நுழைந்தேன்
சிறகுகளில் புதிதாய்
இன்று இணைந்தேன்
அன்புத் தோழமையில்
பேரன்போடு மகிழ்ந்தேன்
ஆணிவேர் பூங்கோடி
ஆலமரமாய் வேரூன்றியது
சிறகுகள் உறவுகள்
நிழலும் தந்தது
கூட்டுக்குடும்பம் பாசமும்
கரைபுரண்டு ஓடுகிறது
கூண்டுக்குள் ஒன்றுக்கூடி
அகமும் மகிழ்ந்தேனே
ஐவகை நிலங்களின்
பறவைகளும் இளைப்பாறும்
பசியென்று இரைகக்காக
எவ்வுயிரும் தவிக்காது
யாருமில்லை என்று
தவிப்போரை அரவணைக்கும்
குறும்படமும் திரையிட்டு
விழிப்புணர்வும் கொடுத்தது
சிறகுகள் அறக்கட்டளையின்
தாங்கும்தூண் பூங்கொடியம்மா
பன்முகத்தன்மை ஆளுமை
அண்ணன் நரியார்
அகிலா பதிப்பகத்தால்
சிறகுகள்நூலும் வந்தது
எண்ணற்றச் சிறகுகளின்
தகவலோடு வெளியிட்டார்
பக்கப் பலமாய்
ரவிராமசாமி அண்ணா
தோள் கொடுத்து
தாங்கும் உசாம்மா
பக்தி பாடல்களும்
இதமாய் ஒலித்தது
ஆடலும் பாடலும்
மனதையும் வருடியது
புகைப்படமெடுத்து சுழன்றார்
நம்மூர் கோபிநாத் ஐயா
அறுசுவையும் வழங்கி
உறவாடிய நண்பர்கள்
உற்றதுணையாக கரம்பற்றி
பயணிக்கும் பாண்டியம்மா
சிறகுகளில் தன்னலமின்றி
பயணிக்கும் பாசப்பறவைகள்
அறத்தின் வாழ்வில்
வளரட்டும் பெருகட்டும்
சரித்திரம் படைத்து
சாதனைகள் புரியட்டும்
✍️ஆதி தமிழன்
