📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ * டிசம்பர் 10 * ✅ *தமிழ் Tamil* 👍
🛐 * ஜார்ஜ் ஹென்றி பாரோ George Henry Borrow * 🛐
மண்ணில் : 05.07.1803
விண்ணில் : 26.07.1881
ஊர் : டெரெஹாம்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : ஐரோப்பா
ஜார்ஜ் பாரோ பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த ஒரு சிப்பாயிக்கு பிறந்தவர். சிறுவயதிலிருந்தே பலவித மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்தையும், அசாதாரண திறமையையும் காட்டினார். ஆகவே 12 வயதின்போது ஒரு புராட்டஸ்டன்ட் கல்வியகத்தில் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைப் படிக்கக் கற்றுக்கொண்டார். மொழியியல் அறிவு மற்றும் எழுதும் திறன் காரணமாக, ஒரு எழுத்தாளராக தனது தொழிலைத் தேர்ந்தெடுத்து பல பிரபலமான நாவல்களை எழுதினார். ஆனால், அவரது திறமைகளை பற்றி தேவன் வேறு விதமான திட்டங்களைக் கொண்டிருந்தார்.
1832 ஆம் ஆண்டில் 'பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபிள் சொசைட்டி' யில் ஒரு பிரதிநிதியாக சேர்ந்த அவர் அங்கு யுனைடெட் கிங்டம்யில் ஒரு பயண மிஷனரியாக (ட்ராவெல்லிங் மிஷனரி) நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் அவர் தனது முதன்மையான பணியாக வேதவசனங்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து, அவற்றை அந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயத்தமானார். பின்பு 'மாஞ்சு' மொழியிலும் தேர்ச்சி பெற்ற அவர், அந்த மொழியில் இருந்த புதிய ஏற்பாட்டின் முந்தைய மொழிபெயர்ப்புகளை திருத்தினார். அதுமட்டுமல்லாமல் அவர் பல கிறிஸ்தவ இலக்கியங்களையும் மொழிபெயர்த்தார் மற்றும் பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் சேகரித்து, மறுபதிவு செய்து, ஒரே பிரதியாக தொகுத்தார்.
அதன்பிறகு, வேதாகமத்தின் அச்சிடுதல் மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட 1835 இல் ஸ்பெயின் நாடுக்கு புறப்பட்டு சென்றார். ஸ்பெயினில் போர்களும் புரட்சியும் நடைபெற்ற குழப்பமான நேரம் அது. ஒருபுறம் நாட்டின் அமைதியின்மை, மறுபுறம் அவருக்கு விரோதமாக இருந்த நிலைமைகள். இவை அனைத்திற்கும் மத்தியில் மிகுந்த விடாமுயற்சியுடனும் தைரியத்துடனும் கர்த்தரின் பணியை அவர் தொடர்ந்து செய்தார். அங்கு அவர் முதன்மையாக லூக்கா எழுதின சுவிசேஷத்தை ஸ்பானிஷ் ரோமானிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்த காரியத்தினால் அங்குள்ள அதிகாரிகள் மிகவும் கோபமடைந்தனர். மிகவும் கடினமான அந்த சூழ்நிலைகளிலும் சுவிசேஷங்களை பரப்ப அவர் முயற்சித்தார். அதினால் அவர் இரண்டு முறை சிறையிலும் அடைக்கப்பட்டார். பசி, குளிர், காயமடைந்த கால்கள் மற்றும் ஒரு நீண்ட நேரம் உழைக்க வேண்டிய நிலை போன்றவற்றால் மிகவும் அவதிப்பட்டார். இருப்பினும், பைபிள் சொசைட்டி சார்பாக தனது பணிகளை நிறைவேற்ற ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் மேலும் இருமுறை பயணம் மேற்கொண்டார். ஸ்பெயினில் தனது பணிகள் மற்றும் அனுபவங்களை அவர் தனது புத்தகமான 'தி பைபிள் இன் ஸ்பெயின்'இல் விவரித்தார். இந்த புத்தகம் மிகவும் புகழ்பெற்றது.
ஜிப்சிகள் மற்றும் நாடோடிகள் மீது அவர் ஒரு சிறப்பு அக்கறை கொண்டிருந்தார். ஆகவே அவர்களோடு நெருங்கி பழகி அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டார். இதன் விளைவாக 30 நாடோடி மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். ஆகிலும் அவற்றில் பல மொழிபெயர்ப்புகள் பிரசுரிக்கப்படவில்லை. கர்த்தரின் சேவைக்காக தனது பன்மொழி திறனை பயன்படுத்திய ஜார்ஜ் பாரோ 1881 இல் தனது மரணத்திற்கு முன் கிட்டத்தட்ட நூறு மொழிகளைப் பேசவோ அல்லது எழுதவோ அறிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
🚸* பிரியமானவர்களே, பிறர் மொழியில் கர்த்தரின் வேதாகமம் இல்லாதவர்களைப் பற்றிய பாரம் உங்களுக்கு உண்டா? * 🚸
🚸* “கர்த்தாவே, எனக்கிருக்கின்ற திறமைகளை உமது ஊழியத்தில் பயன்படுத்த எனக்கு உதவிச் செய்யும். ஆமென்! " * 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
*******
நன்றி: V. வீர சுவாமிதாஸ்

