*அக்டோபர் 19, 1952*
தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மதராஸ் மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்கவேண்டுமென்ற கோரிக்கைக்காக விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியவாதியுமான பொட்டி ஸ்ரீராமுலு சாகும்வரை உண்ணாவிரதத்தை துவக்கிய நாள்.
இவரது கோரிக்கையையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நேருவின் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. தனது கோரிக்கையில் உறுதியாக இருந்த ஸ்ரீராமுலு டிசம்பர் மாதம் 15ம் தேதி இரவு மரணமடைந்தார்.
அதைத்தொடர்ந்து ஆந்திரப் பகுதிகளில் கலவரம், வன்முறைகள் வெடிக்க தனி ஆந்திரக் கோரிக்கையை ஏற்பதாக நேரு அறிவித்தார். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
