ShareChat
click to see wallet page
~GD (NAIDU) வை GD மேம்பாலம்னு பேர் வெச்சா என்ன ஆகும். GD என்பது மக்களுக்கு புரியாம இருக்கும். அதன் பின் அது என்னடா ஜிடி என கேள்வி எழும். அதன் பின் ஜி டி என்பதற்கு என்ன அர்த்தம் என அறிந்து கொள்ள முயற்சி உண்டாகும். அதன்பின் ஜிடி என்றால் கோபால்சாமி துரைசாமி என்பது தெரியவரும். அதன்பின் யார் அந்த கோபால்சாமி துரைசாமி என அடுத்த தேடல் தொடங்கும். அதன்பின் ஹோ நம்ம ஜிடி நாயுடு தான் கோபால்சாமி துரைசாமியா என பதில் கிடைக்கும். அதன்பின் ஆமா எதுக்கு ஜிடி நாயுடு எனும் பெயரை கோபால்சாமி துரைசாமி என அழைக்கிறார்கள் என கேள்வி எழும். அதன்பின் அதற்கான பதிலை தேட முற்படுவார்கள். பதிலை தேட முற்படும்போது அவர்களுக்கு கிடைக்கும் விடை என்ன என்றால் ஜா*தி பெயரை நீக்கிவிட்டார்கள் போல, ஜா*தி பெயரை உபயோகிக்க கூடாது போல எனும் சிந்தனை உருவாகும். மாற்றம் என்பது மாங்காய் பறிப்பது போல் சுலபமானது அல்ல, ஒரே நாளில் நிகழ்வதும் அல்ல. இம்மாதிரி சிறு சிறு செயல்களின் மூலமே ஏற்படுத்த முடியும். முத்துராமலிங்கம் என அழைத்தால் போதும், அது மரியாதை குறைவாக இருந்தால் முத்துராமலிங்கர் எனவும் அழைக்கலாம். அதுவும் மரியாதை குறைவாக இருந்தால் பசும்பொன்னார் எனவும் அழைக்கலாம். டி எம் நாயர் பூலித்தேவன் என ஜா*திப் பெயர்கள் உடைய முன்னவர்கள் எல்லாம் இயன்றவரை அந்த பெயரை நீக்கி அழைக்க ஆரம்பிக்கலாம். அதன் மூலம் ஜா*திப் பெயர்கள் தவறு என மேலும் உறுதிப்படுத்தலாம். ரேவந்த் ரெட்டி சந்திரபாபு நாயுடு என மதிப்புமிக்க பதவிகளை வகிப்போர் நமக்கு விருந்தினர்களாக வந்தாலும் அவர்களையும் திரு ரேவந்த் திரு சந்திரபாபு என அழைக்கலாம். ஜா*திப் பெயர்களை இல்லாமல் அழைப்பது மரியாதை குறைவானது இல்லை. மேலும் நாம் தொடர்ந்து அவ்வாறு அழைப்பதன் மூலம் அவர்களுக்கு ஜா*திப் பெயர்கள் தவறு என புரிய வைக்கலாம். அவர்களும் நாம் தொடர்ந்து தமிழகத்தில் இவ்வாறு அழைப்பதன் மூலம் அது வழக்கமான செயல் என புரிந்து கொள்வார்கள். இன்னும் அவர்களுக்கு நல்ல அறிவு இருந்தால், ஜா*திப் பெயர்களை இட்டுக் கொள்வது தவறுதான் என உணர்வார்கள். ஒருவேளை உணர்ந்தால் அவர்களும் அவர்கள் ஊரில் அவர்கள் பெயரில் அதை நீக்கவும் வாய்ப்பு உண்டு. சிறு தீப்பொறிதான் காட்டை எரிக்கும். பதிவர் -@தோழர் ஜேகே #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
😅 தமிழ் மீம்ஸ் - Flyover 60 RS UNad೦uta aae 443 ~ [ 6  {ುಕ    6 ~ ~ Flyover 60 RS UNad೦uta aae 443 ~ [ 6  {ುಕ    6 ~ ~ - ShareChat

More like this