#samayal kuripukal #சமையல் குறிப்புகள்
சிக்கன் கிரேவி
ஒரு கடாயில்
ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,
சிறிய துண்டு பட்டை,
இரண்டு கிராம்பு,
ஒரு ஏலக்காய்,
ஒரு ஸ்பூன் முழு மல்லி,
அரை டீஸ்பூன் சோம்பு,
சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு,
4 முந்திரி,
7 வத்தல்
3 ஸ்பூன் வறுத்த தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைக்கவும்.
இன்னொரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கிய பிறகு,
கழுவிய அரை கிலோ சிக்கன் சேர்த்து, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிக்கன் நன்கு வதங்கிய பிறகு, ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் கலித்து, அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வதக்கி எடுத்தால் சிக்கன் கிரேவி ரெடி.
