#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 5
கார்ல் பெர்டினான்டு கோரி பிறந்த தினம்
(Carl Ferdinand Cori) பிரித்தானிய இராச சமூகத்தின் வெளிநாட்டு அறிஞர் (ForMemRS),
(டிசம்பர் 5, 1896 – அக்டோபர் 20, 1984) செக் நாட்டின் பிராகாவில் (அப்போது ஆஸ்திரியா-அங்கேரி, தற்போது செக் குடியரசு) பிறந்த உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமாவார்.
தமது மனைவி கெர்டி கோரியுடனும் அர்கெந்தீனாவின் மருத்துவர் பெர்னார்டோ ஊசேயுடனும் இணைந்து 1947இல் நோபல் பரிசு பெற்றார். கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கார்போவைதரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.
#அறியப்படுவது
கிளைக்கோசன்
#விருதுகள்
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)
வில்லர்டு கிப்சு விருது (1948)
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

