டிசம்பர் 2 இன்று சர்வதேச அடிமைத்தனம் ஒழிப்பு நாள். யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிசம்பர் 2 அம், நாள் சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி.
ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்படுகின்றனர்.
ஒவ்வொருவரும், மற்றவரின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க இத்தினத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணற்ற மக்கள் அடிமை முறையால் இன்று தங்கள் வாழ்வை இழந்துவருவதை கவனப்படுத்தும் விதத்திலும் அதற்கு எதிராக பணியாற்ற வேண்டும் என்பதையும் இந்நாளில் நினைவில் கொள்வோம். #life #lifes
![life - [ntetnationa] Day forthe Abolition Slavery of அனைத்துலக டிசம்பர் 2 அடிமைத்தனம் ஒழிப்பு நாள் [ntetnationa] Day forthe Abolition Slavery of அனைத்துலக டிசம்பர் 2 அடிமைத்தனம் ஒழிப்பு நாள் - ShareChat life - [ntetnationa] Day forthe Abolition Slavery of அனைத்துலக டிசம்பர் 2 அடிமைத்தனம் ஒழிப்பு நாள் [ntetnationa] Day forthe Abolition Slavery of அனைத்துலக டிசம்பர் 2 அடிமைத்தனம் ஒழிப்பு நாள் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_62784_190749ca_1764697060135_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=135_sc.jpg)
