#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ வழிபட்ட உலகவிடங்கீசுவரர்..*.!🌹
சேர,சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இணையாக தனியாட்சி செலுத்திய பெருமை கொங்கு மன்னர்களுக்கும் உண்டு.
உலக வணிக மையமாக திகழ்ந்த பெருமை இன்னும் கொங்கு நாட்டுக்கே உரியது.
மிகப் பழங்காலம் தொட்டே கொங்கு நாடு சிறப்புமிக்கதாக இருந்து வருகிறது.
மான்படுகாடு, தேன் படுவரை(மலை),மீன்படுசுனை,பொன்படுகுட்டம்(சுரங்கம்)என்று கொங்கு நாட்டைக் கல்வெட்டுகள் வர்ணிக்கும்.
சங்க இலக்கியத்தில் "உலகடம்' என்று இடம்பெற்று பிறகு கி.பி.12-ம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களின் ஆட்சியில் "உலகவிடங்கம்' எனப் பெயர் பெற்ற இவ்வூர் நாளடைவில் "ஒலகடம்' என்றானது.
உலக விடங்கம் காவிரிக் கரையில் வடக்கில் அமைந்திருந்தபடியால் "வடகரை உலக விடங்கம்' எனப்பட்டது.
இங்குள்ள இறைவனை உலகேஸ்வரர்,ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.
அம்மனை "உலக நாயகி' என்றழைக்கின்றனர்."விடங்கர்' என்றால் "உளியால் செதுக்கப்படாதவர்' என்று பொருள்.
இங்கு உள்ள ஈசன் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார்.உலக விடங்கர் உலக மக்களைக் காக்கும் பெருமைக்குரிய உலக ஈஸ்வராக இங்கு திகழ்கிறார்.
ராமாயணத்தில் இத்திருத்தலம் புகழுடன் பேசப்படுகிறது.
சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு வான் வழியில் அனுமன் விரைந்து வருகிறார்.அவர் உலக விடங்கர் திருக்கோவிலுக்கு மேலாக வரும் போது,அவரது கை அசைவற்று நின்று விடுகிறது.
கீழே உலக விடங்கர் எழுந்தருளியிருக்கும் காட்சியைக் கண்டு மூன்று முறை சஞ்சீவி மலையுடன் திருக்கோவிலை வலம் வந்து வணங்கிச் செல்கிறார்.
இவ்வாறு அனுமனை ஈர்த்து ஆட்கொண்ட திருத்தலம் இது.அதனால் சஞ்சீவி மலையின் ஆற்றலும்,பயனும் இத்தலத்தில் நிறைந்துள்ளது.
கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டுள்ள மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.
கொங்குச் சோழ மன்னன் ஆதித்த கரிகாலன் அமைத்த திருக்கோவில்களில் காணப்படும் கோட்டுச் சிற்பங்களைப் போன்ற சிற்பங்கள் இக்கோவிலிலும் அமைந்துள்ளன.
கொங்குச் ழோழர்களில் வீரராஜேந்திரன் என்ற மன்னனின் 24ஆவது ஆட்சியாண்டில் அமைத்த கல்வெட்டு ஒன்று சுப்பிரமணிய சுவாமி சந்நிதி முன் உள்ளது.
அதில் அம்மன்னன் குன்றமெரித்த பிள்ளையாரை அங்கு எழுந்தருளச் செய்ததையும்,அச்செயலை ஊராள்வோர் இருவர் முன்னின்று தெரிவித்த செய்தியும் அதில் உள்ளது.
இம்மன்னனே இக்கோவிலுக்கு நிலம் பல தானம் தந்ததை மேற்குச் சுவரிலுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
பேரரசன் விக்கிரமச் சோழன் செய்த திருப்பணிகளை மகா மண்டபத்தூண் கல்வெட்டுக் கூறுகிறது.
திரிபுவன வீரதேவன் காலத்தில் (கி.பி.12)ஆம் நூற்றாண்டு உலக விடங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இக்கோவிலில் சந்தி விளக்கு எரிக்க,அரை அச்சு பொன் கொடுத்ததை முன்பக்கக் கல்வெட்டுக் குறிக்கிறது.
கிழக்குச் சுவரில் உள்ள சிறப்பு மிக்க கல்வெட்டால் ஊரின் பெயர் "உலக விடங்கம்' என்றும்,இறைவன் பெயர் "உலகவிடங்கீசர்' என்றும் அறியலாம்.
மகா மண்டபத்தில் ராசகேசரி வர்மன் சுந்தர பாண்டியன்(கொங்குப் பாண்டியன்)கல்வெட்டு ஒன்று அவன் இக்கோவிலுக்கு வரி நீக்கி நிலம் தானம் தந்ததைக் கூறுகிறது.
அமைவிடம்
ஈரோடு மாவட்டம்,பவானியில் இருந்து 12 கி.மீ.தொலைவில் வெள்ளித்திருப்பூர் செல்லும் பாதையில் ஒலகடம் திருக்கோவில் அமைந்துள்ளது.🌹

