ShareChat
click to see wallet page
Anyone portraying Vijay as a victim is a bigger perpetuator than Vijay himself. If you call yourself a leader take responsibility and move on. வாகனத்தில் லைட் போட்டு போட்டு அணைத்து விளையாடுவது. "என்னா சார்ர்ர்ர்ர் கேக்குதா...இந்த கூட்ட்டத்த பாத்தீங்களாஆ ஆ ஆ.. நம்ம பசங்க சம்பவம் பண்ணிட்டாங்க, தரமான செய்கை " இந்த மாதிரியான சொல்லாடல்களால் silent ஆக தொண்டர்களை provoke செய்தது, என he orchestrated the mood of the cadres to go reckless. ஸ்டாலின், எடப்பாடி, திருமாவளவன் சீமான், அண்ணாமலை பேசும்போது யாரும் மரத்தில், கரண்ட் கம்பத்தில் ஏறவில்லை. அந்த பொதுச்செயலாளர், கொ.ப.செ வந்து " தயவு செஞ்சி கீழ வாங்க ப்லீஸ்" என்று கெஞ்சவில்லை. Asbestos ஷீட் இருக்கும் கடையின் கூரை மேல் ஏறவில்லை. இதெல்லாம் தனக்கு மட்டுமே நடக்கிறது என்று காட்டிக்கொள்வதில் இருக்கும் show off மனநிலை. தம்பி, உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம், சேவக், என இயல்பாக இருக்கும் சொல்லாடல்களை விட்டு வித்தியாசமாய் காட்டிக் கொள்ள Virtual warriors என்று ஏதோ போர் வீரர்களைப் போல் அவர்களை நினைக்க வைக்கும் Grandiose complex. சிங்கம் வேட்டையாட களம் எறங்கிடுச்சேய்ய்ய் என்று தனக்குத் தானே கொடுக்கும் ஆந்திரா ஹீரோ லெவல் build up. கிரீஸ் தடவி வைத்து ஏதோ அவர்களால் பாதிப்பு ஏற்படப்போவது போலவும், அவர்களால் விஜய் உயிருக்கே அச்சுறுத்தல் இருக்கிறது போலவும் ரசிகர்கள் மேல் ஒரு பிம்பம் ஏற்படுத்தியவர் விஜய். இது இன்றல்ல. நெய்வேலியின் selfie எடுக்கும்போதே கூட்டத்தை Mass என்று காட்டும் ஒரு superiority complex கொண்ட நடிகனாய் தான் அரசியலிலும் இருந்தார். ஏதோ CIA, FBI, Mossad , KGB போன்ற உளவு அமைப்புகள் எல்லாம் இவரை முடித்துவிட முனைவது போலவும், இவர் அப்படியே army chief போலவும், வேண்டிய நேரத்தில் வரும் Messiah complex கொண்டு அலைந்தது விஜய் தான். இதில் இவருக்கு தூபம் போடும் ஆதவ் அர்ஜுனா, அவர் பேரை சொன்னால் கூட " விஜய் சொல்லாதே தளபதி என்று சொல்லுங்கள்" என " ஜீவா இப்ப சட்டைய கிழிப்ப்பான் பாரு" என ஏத்திவிடும் புஸ்ஸி ஆனந்த் , மத்திய அரசுப்பணியிலிருந்த அருண் என சகலரும் ஒரே Thought process கொண்ட நபர்கள். போலீஸ்- எதிரி ஸ்டாலின்-எதிரி பத்திரிக்கையாளர்கள்- எதிரி எடப்பாடி- எதிரி ? திருமாவளவன்- தன் கூட்டணிக்கு வராததால் எதிரி, களத்தில் நிற்கும் சொந்த தொண்டன்- எதிரி ஆனால் டிவிட்டரில் " அண்ணன் யாரு...தளபதீய்ய்ய்..." என்று பதிவுபோடும் trackers and PR handles மட்டுமே நண்பன் என்று வரித்துக்கொண்டு பஞ்ச் டயலாக்கையே பேசி இவ்வளவு காலம் விஜய் செய்தது ஒரு சினிமா ஷூட்டிங். சரி, துக்கம் நடந்த இடத்திலாவது இருந்தாரா என்றால் அவசர அவசரமாய் சென்னை வந்துவிட்டு, பதில் பேசாமல் ஓடி ஒளியும் ஒரு கோழை தான் முதல்வர் வேட்பாளராம். Spot க்கே வராமல் பாட்டில் மட்டும் " உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நான்" என்று வாய் உதார் விட்ட ஒரு cadre தான் விஜய். உண்மையில் ஜி.கே. வாசனின் த.ம.க தொண்டன் ஒருவனுக்கு இருக்கும் அரசியல் அடிப்படை கூட தெரியாத அளவுக்கு அரசியல் பேசிவந்த ஒரு கானல் நீர் தான் விஜய். ஸ்டாலின் பிடிக்காதோர், உதயநிதி வெறுப்பாளர், எடப்பாடி வெறுப்பாளர், திருமா வெறுப்பாளர், அண்ணாமலை வெறுப்பாளர், சீமான் வெறுப்பாளர் என " உலக வெறுப்பாளர்களே ஒன்றுகூடுங்கள்" என்று அமைக்கப்பட்ட ஒரு கட்சியாய் தான் விஜய் த.வெக வை நடத்தி வந்தது கண்கூடு. நியாயமாய் விஜய் பேசும்போது அங்கே வேனில் இரண்டம் கட்ட தலைவர்கள் நிற்க வேண்டும். ஸ்டாலின் பேசினால், நேரு நிற்பார் எடப்பாடி பேசினால், சி.வி ஷண்முகம் நிற்பார், திருமா பேசினால் வன்னியரசு நிற்பார், ஜெயலலிதா பேசினால், ஜெயக்குமார் நிற்பார், சீமான் பேசினால், இடும்பாவனம் கார்த்தி நிற்பார், செல்வப்பெருந்தகை பேசினால் ஜோதிமணி நிற்பார். அண்ணாமலை பேசினால், கரு நாகராஜன் , நாராயணன் நிற்பார். இது தான் அரசியல் வழமை. ஆனால் தொண்டர்களுக்கு எல்லாம் bouncer கள் தான் இரண்டாம் கட்ட தலைவர்களாக உடன் நிற்பார்கள் என்று ஒரு " ஆண் ஜெயலலிதா"வாக தன்னை நினைத்துக்கொண்ட ஒரு சிறுபிள்ளை தான் விஜய். என்னால் முடியாதபோது நான் அரசியலுக்கு வந்து எனது தொண்டர்களுக்கு ஏதாவது ஒன்று ஆனால் என்ன ஆவது, அதனால் நான் வரவில்லை என்று பின்வாங்கிய ரஜினிக்கு இருக்கும் அக்கறையில் கால்வாசியாவது இருக்க வேண்டும். அதை நக்கல் அடிக்க இருக்கும் உரிமை, தனது தப்பை own செய்வதிலும் இருக்க வேண்டும். " அந்த brand ட அழிக்கிறதுல தான் நான் expert ட்டே" என சுய பில்ட் அப் கொடுக்கும் ஆள், இத்தனை குழந்தைகள் இறந்துகிடக்கும்போது ஒரு ஒய்யாரமான நடிகை event முடிந்து ஓடுவது போல் தனி விமானத்தில் ஓடி சென்னை பங்களா வீட்டிற்கு சென்றிருக்கக்கூடாது. ஏன் திருச்சியில் , கரூரில் ஹோட்டல்களே இல்லையா? அல்லது தங்க கூட மனமே இல்லையா? ஒரு உயிரை தனது வீட்டிலேயே பறிகொடுத்த விஜய்க்கு இத்தனை குழந்தைகள் செத்துக் கிடக்கும்போது அது தன் வீட்டு துக்கம்தான் என உடன் நிற்க தோன்றவில்லையா? "இல்லை, அண்ணன பாக்க வந்து 70 சாவு விழுந்திருக்கு, அண்ணன் தான் மாஸ்" என்று சொல்ல காத்திருந்தாரா? ஆகக்கேவலம். அவர் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் " அவர் நெஞ்சில் குடியிருக்கும், அந்த குட்டிக் குட்டி பிள்ளைகளும், தாய்மார்களும், தங்களைகளும்" தான் மடிந்து கிடக்கிறார்கள். அதற்கு உடன் நிற்காமல் இங்கே ஓடோடி வரும் இழிவு ஏன்? இல்லை வழக்கம்போல் பாதிக்கப்பட்டவர்களும் பனையூர் வரவேண்டுமா? Vijay was the Grim reaper all along. தாளமுத்து நடராசன் மொழிப்போர் தியாகிகளின் இறுதி ஊர்வலத்தில், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அண்ணா தான் உரையாற்றினார். அண்ணா தான் அதை உடன் நின்று நிகழ்த்தினார். பெரியாருக்குப் பக்கத்தில் இவ்விரு முத்துகளுக்கும் சிலை வைக்க வேண்டுமென்றார். தொண்டனின் சிதை எரியும்போது நல்லடக்கம் நடக்கும்போதுகூட அதை அரசியல் வேள்வியாக்கி அவர்களை immortalize செய்த பெருந்தை தான் தமிழினத் தலைவன் என் அண்ணாதுரை. தன்னை "அண்ணா" என்றும் அண்ணாவின் வழித்தோன்றல் என்று சொல்லிக் கொள்ளும் விஜய் இனியொருமுறை அண்ணா பெயரை உச்சரிக்க நாணிக் குறுக வேண்டும். அத்தகைய புறக்கணிப்பை தான் விஜய் தற்போது அந்த இறந்தவர்களுக்கு செய்திருக்கிறார்.. இல்லை, இதை ஏதோ ஊரார் செய்த சதி என்று சொல்லி தப்பிப் பிழைப்பது தான் தனது அரசியல் என்று ஆக்கிக் கொள்வார் என்றால்... சிலம்பு சொல்வதுபோல் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்... #😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு #🤭அரசியல் மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #🤯தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு ?

More like this