நவ 15 - கடலோரப் பகுதிகளை நெருங்கி வரும் மழை மேகக் குவியல்...
இன்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை நவ 16 மழை தீவிரமாக இருக்கக்கூடும்...
நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் ,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்க கூடும் விவசாய நண்பர்கள் சற்று எச்சரிக்கை இருப்பது நல்லது குறுகிய நேரத்தில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்..
சீர்காழி, காவேரிப்பட்டினம், மயிலாடுதுறை ,குத்தாலம் ,ஆடுதுறை ,திருக்கடையூர் ,கொல்லுமங்குடி, தரங்கம்பாடி, தேடியூர், நன்னிலம், காரைக்கால், கீழ்வேளூர் ,நாகூர், உள்ளிக்கோட்டை, தகட்டூர், சிதம்பரம் சுற்று பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும்...
வேதாரண்யம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் மிக கனமழை முதல் சற்றே அதிக கனமழை வரை பெய்யும்...
கடலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மிதமான முதல் கனமழையும்..
பெரம்பலூர், அரியலூர் , ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யும்
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பரவலான இடங்களில் மிதமான முதல் கனமழையும் ஒரு சில இடங்களில் சற்றே மிக கனமழையும் பெய்யக்கூடும்...
சென்னையில் திங்கட்கிழமை கன மழை பெய்யக்கூடும்
#🌧️மழைக்கால மீம்ஸ்😆

