ShareChat
click to see wallet page
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று டிசம்பர் 6 ,1897 உலகின் முதல் அரசு உரிமத்தின்மூலம் முறைப்படுத்தப்பட்ட டாக்சி சேவை லண்டனில் தொடங்கிய நாள் டிசம்பர் 6. வாடகை வாகனச் சேவை, ஹேக்னி கேரேஜ் என்ற பெயரில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே லண்டனிலும், பாரிசிலும் உருவாகிவிட்டது. 1605இல் ஹேக்னி கேரேஜ் குதிரை வண்டிச் சேவை லண்டனில் இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. இச்சேவையைச் சட்டப்பூர்வமாக்க, 1635இல் சட்டம் இயற்றப்பட்டது. தங்க வருபவர்களை அழைத்துச் செல்ல, விடுதிகள் இச்சேவையை அதிகம் பயன்படுத்தியதால், முதல் டாக்சி ரேங்க் (ஸ்டாண்ட்), மேபோல் விடுதியில் 1636இல் தொடங்கப்பட்டது. 1654இல் மற்றொரு சட்டம் இயற்றப்பட்டு, ஹேக்னி கேரேஜ் உரிமம் 1662இல் வழங்கப்பட்டது. ஹான்சம் கேப் எனும் மேம்படுத்தப்பட்ட குதிரை வண்டி 1834இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1897இல் பேட்டரியால் இயங்கும் மின்சார டாக்சிகள் அறிமுகமாயின. அக்கால செல்வந்தர்களின் வண்டிகளில் அவர்கள் உள்ளேயும், குளிர், மழையானாலும் ஓட்டுனர் வெளியேயும் இருப்பார்கள். அதைமாற்றி, ஓட்டுனரை தங்களுடன் அமரச் செய்ய அவர்கள் தயாராக இல்லாததாலேயே, ஓட்டுனரின் பகுதி தனியாக உள்ள லிமோசீன் வகை டாக்சிகள் உருவாயின. டாக்சி மீட்டர் மூன்று ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர்களால் 1897இல் உருவாக்கப்பட்டது. உலகின் முதல் மீட்டர் பொருத்தப்பட்ட, பெட்ரோலால் இயங்கும் டாக்சி டெய்ம்லர் நிறுவனத்தால் 1897இல் ஜெர்மெனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரி, கட்டணம் என்று பொருள்படும் இடைக்கால லத்தீன் சொல்லான டேக்சா என்பதிலிருந்து, டேக்சாமீட்டர் என்று மீட்டருக்குப் பெயரிடப்பட்டதால் டாக்சி, கேப்ரியோலெட் என்ற குதிரைவண்டியின் பெயரிலிருந்து கேப் ஆகிய சொற்கள் உருவாயின. லண்டனில் டாக்சி ஓட்டுனர் ஆவதற்கு, 'லண்டனைப் பற்றிய அறிவு' என்ற மிகக் கடுமையான தேர்வு முறை இன்றுவரை நடைமுறையில் உள்ளது. லண்டன் குறித்த தகவல்கள், பயணிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய அணுகுமுறை ஆகியவைகுறித்து 3-4 ஆண்டுகளுக்குப் பயிற்சியெடுத்து, பலமுறை முயற்சித்தால்தான் இதில் தேர்ச்சியடையமுடியும் என்பதால், லண்டனின் டாக்சி சேவை இன்றுவரை உலகின் மிகச்சிறந்ததாக விளங்குகிறது *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat

More like this