#📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #📜கவிதையின் காதலர்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
மாது - ரகசியம் நிறைந்தவள்
*********************************
மங்கை ஒருத்தி
மனம் கவர்ந்தாள்
மயக்கம் கொண்டு
நேசத்தை பொழிந்தேன்
கவிநயம் காற்றினிலே
எழிலாக வந்திடுவாள்
கனிந்து விரிந்து
கரைந்தோடி இனிக்கும்
ஆசையும் காதலும்
தவித்திடும் உள்ளத்திலே
ஆழ்கடலின் முத்துகளில்
பேரன்பும் துளிர்க்கட்டும்
காற்றின் மொழியில்
அலையாய் எழும்பிடும்
காலமெல்லாம் அனலாய்
தீப்பொறி பறக்கும்
சித்திரத்தில் கலையாய்
நித்தமும் மிளிர்ந்திடும்
சிலையின் கலைநயம்
கனவிலும் தழுவிடும்
மாதுளமாய் மாதவள்
ஓவியமாய் நிலைத்திடுவாள்
மாஞ்சோலை கனிந்து
கண்ணெதிரே அசைந்தாடுதே
ஈர்ப்புகளும் மனதில்
எல்லைக்குள் சுழலும்
ஈரெழு உலகில்
அறியப்படாத ரகசியம்
நிறைவேறா ஆசைகள்
நாள்தோறும் எழும்பிடும்
நிழலாய் நீண்டுக்கொண்டே
மரணம்வரை தொடரும்
✍️ஆதி தமிழன்
