🌕🌘சந்திர கிரகணம்🌒🌕
✨எழுந்து விரைந்து தொழுங்கள் கிரகணம் விலகும் வரை.
✨அல்லாஹ்வை புகழுங்கள் (தக்பீர் கூறுங்கள்)
✨ஸதகா செய்யுங்கள்.
✨அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
✨இரண்டு ருகூ இரண்டு ஸஜ்தாக்கள் ஒரு ரக்ஆத்திற்கு (மொத்தம் நான்கு) நீண்ட நேரங்கள் செய்யுங்கள்
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
ஸஹீஹ் புகாரி : 1045
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1042.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1048.
#islam #சந்திரகிரகணம் #Miracle #HalalPost #Moonesclipse
