*அக்டோபர் 15,*
*உலக மாணவர்கள் தினம்*
இந்திய இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உடலால் மறைந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார்.
1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, ராக்கெட், அணு ஆயுத, ஏவுகணை விஞ்ஞானி, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 2015ல் உயிர் பிரியும் வரை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையால் இது அதிகாரப்பூர்வமாக "உலக மாணவர் தினம்" என்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
