ShareChat
click to see wallet page
உறங்காத நினைவுகள் ஆழ்ந்த தூக்கமே உறக்கம் எனப்படுகிறது. உறங்குவது என்பது ஒரு செயலற்ற நிலை. உலகத் தமிழர்களிடம் வழக்கொழிந்து வரும் 'உறக்கம்' என்ற சொல், இன்றும் தென் மாவட்டங்களில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார் வள்ளுவர். அதாவது, உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு. உறக்கம் கொள்வதைப் போன்றது இறப்பு. அதனால்தான் இறப்பினை 'மீளா உறக்கம்' என்கிறார்கள். உறக்கத்தில் சுவாசம் நிதானமாகவும் இதயத்துடிப்பு ஒரே சீராகவும் இருக்கிறது. பொதுவாக குளிர்காலங்களில் வாழ்வாதாரங்களில் பற்றாக்குறை நிலவும்போது ஆற்றலைச் சேமிக்கும் வழியாக ஆழ்ந்த உறக்கம் (Hybernation) நிகழ்கிறது. எனவே, Hybernation என்ற ஆங்கிலச் சொல் கிட்டத்தட்ட உறக்கம் என்ற பொருளைத் தருகிறது எனலாம். 24 மணி நேர சர்க்காடியன் சுழற்சியின் காரணமாக இயற்கையாகவே விலங்குகளுக்கு தூக்கம் வருகிறது. தூக்கத்தில் வாழ்க்கையை பிரதிபலிக்கிற கனவுகள் தோன்றுகின்றன. மனநிலை, அறிவாற்றல் மற்றும் நினைவுகள் ஆகியவை சீராக இருப்பதற்கு தூக்கம் இன்றியமையாதது. பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல தூக்கத்தில் ஆற்றல் ரீசார்ஜ் ஆகிறது. உறக்கத்தின்போது உடலின் வெப்பநிலை குறைகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவது சற்று சிரமம். ஆயினும், ஆழ்ந்த உறக்கத்திலும் நினைவுகள் அழிவதில்லை; மனதிலே நினைவுகள் தொடர்ந்து நிழலாடிக் கொண்டிருக்கின்றன, என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நினைவுகள் ஒரு தொடர்கதை. நினைவுகளே உயிரின் உன்னதமான அம்சம் எனலாம். உயிரற்ற உடலில் நினைவுகள் இல்லை! நினைவது பிறளும்போது இருக்கும் உயிருக்கும் அர்த்தம் இல்லை. "உறங்காத நினைவுகள்" தொடரின் மூலம், மீண்டும் உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சி! வாசக அன்பர்களுக்கு திரைபாரதியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி! வணக்கம்!! - திரைபாரதி https://www.amazon.in/dp/B0DK68YHV3 #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
அரசியல் - ShareChat
00:20

More like this