#sneha die hard fan #🌻🌻காலை வணக்கம்🌻🌻 தலைப்புச் செய்திகள் சன் நியூஸ் இன்றைய தலைப்புச் செய்திகள்.
📰 வங்கக் கடலில் சென்னைக்கு 850 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம். இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை தீவிர புயலாக உருவெடுக்கிறது.
📰 காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே மோந்தா புயல் கரையை கடக்கும். 110 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி வீசக்கூடும் என எச்சரிக்கை.
📰 சென்னை, செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு பெய்யும் மழை. வேலூர், தேனி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.
📰 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை.
📰 புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார். நிவாரண முகாம்களில் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு.
📰 தமிழ்நாட்டில் இரிடியம் மோசடி தொடர்பாக மேலும் 27 பேர் கைது. மொத்தம் 57 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை தீவிரம்.
📰 டி.டி.வி. தினகரன் Expiry date ஆன அரசியல்வாதி என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம். தேர்தலின்போது யார் Expiry ஆகப் போகிறார்கள் என்று தெரியவருமென தினகரன் பதிலடி.
📰 பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 20 நாட்களில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் சட்டம். முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி.
📰 எல்.ஐ.சி.யில் மக்கள் முதலீடு செய்த பணத்தை அதானி நிறுவனத்திடம் கொடுப்பதா? நம்பிக்கை துரோகம் என காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம்.
📰 மத்தியப்பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது. ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு பாலியல் சீண்டல் அவமானகரமானது என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
📰 ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சீனா உதவும் என ட்ரம்ப் நம்பிக்கை. ட்ரம்ப் ஏசியான் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிலையில், புதினின் தூதர் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா பயணம்.
📰 தென்கொரியா செல்லும் ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு. சியோலில் ஏராளமானோர் திரண்டு விரிவிதிப்பு கொள்கைகளுக்கு கண்டனம்.
📰 நாளை தொடங்குகிறது சென்னை சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி. 20 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். #ரெங்கா! #renga-vamba!

