ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்-04
( அருளியவர் ஆதிசங்கர பகவத் பாதர்)
ஞானம் பெற.
ஸ்லோகம்-02.
ந ஜனாமி ஸப்தம் ந ஜனாமி சார்த்தம்
ந ஜனாமி பத்யம் ந ஜனாமி ஸத்யம்
சிதேகா ஷடஸ்யா ஹ்ருதி த்யோத்தே மே
முகான்னிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்.
தமிழாக்கம்.
( வரகவி யு.எம். நடராஜ ஸர்மா)
கவியறியேன் வசனமோ கண்டறியேன், என்
செவியறியாதொலியெதையும் -
-செப்பியுமறியேன்- பொருள்
புவி புகழும் ஆறுமுக; உன் புனிதமுகம்-
-நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச் சொல் தெளிந்து
-வரும் நெஞ்சிலிருந்து.
கருத்து-
எதுவும் அறியாத பாமரன் நான்.
எனக்கு எழுத்தும் தெரியவில்லை,அதன்
சப்தமும் புரியவில்லை. எனவே கவியும்,
காவியமும் அறியாதவன். உலகம் போற்றும் குமரனே, உன் அழகிய ஆறு திருதிருமுகத்துடன், கூடிய, ஞானச் சுடரான உருவம் ஒன்றுதான் என் மனதில் நிற்கின்றது.
ஸ்வாமி நாதனாக, தந்தைக்கு உபதேசம்
செய்த உன் திருமுக தரிசனத்தால்,
என்னிடமிருந்து தேன் மொழியாம்,
🌺 தமிழ் மொழி 🌺 அருவி போல் கொட்டுகிறது.
குறிப்பு-
பகவத்பாதர்-ஞானத்தின் உருவாக இருந்தாலும், தன்னை எப்போதும் ஒரு பாமரன்/ கல்வியறிவு இல்லாதவன் என்றே கூறிக் கொள்கிறார்.
ஸௌந்தர்ய லஹரீ- ஸ்லோகம்-98.
“ கதா காலே மாத: கதய கலிதாலிக் தகரஸம்”-
என்று துவங்கும் ஸ்லோகத்தில் -
நான் கல்வி அறிவை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவன்- என பாடியுள்ளார். 🚩🕉🪷🙏🏻 #ஶ்ரீ ஆதிசங்கரர். #மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன்

