🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🌹பிறைசூடி துதிபாடி🌹
💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌻பாடல்🌻🌹
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🍁அறிவிலன் ஐயிருவாய் அழஓர்விரல் வைத்தவனே
🍁பொறியர வார்த்தவனே புரிநூலணி மார்பினனே
🍁செறிபொழில் சூழ்ந்தழகார் திருமங்கல நன்னகரில்
🍁வெறிகமழ் கொன்றையினாய் வினையேனிடர் தீர்த்தருளே.
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
பொழிப்புரை :
அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருமங்கல நகரில் உறைகின்ற மணம் கமழும் கொன்றை மலரை அணிந்தவனே !! புள்ளிகளை உடைய நாகத்தை அரைநாணாகக் கட்டியவனே !! பூணூலை மார்பில் அணிந்தவனே !! அறிவில்லாத இராவணனது பத்து வாய்களும் அழும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே !! மிக்க வினைகள் உடையவனான என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக !!
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 #சிவ
00:57
