*வரலாற்றில் இன்று*
27 செப்டம்பர் 2025
1624 : பார்படோஸை சூறாவளித் தாக்கியதால் 27 பிரிட்டிஷ் கப்பல்கள் மூழ்கியதில் 3,000 பேர் உயிரிழந்தனர்.
1791 : யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்ஸின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1825 : இங்கிலாந்தில் 43 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகம் செல்லும் நீராவி என்ஜின் மூலம் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.
1854 : ஆர்க்டிக் என்ற நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 322 பேர் இறந்தனர்.
1922 : முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியிலிருந்து முடி துறந்தார்.
அவரது மூத்த மகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடிசூடினார்.
1937 : கடைசி பாலினீஸ் இனப் புலி கொல்லப்பட்டது.
1938 : யூத வழக்கறிஞர்கள் ஜெர்மனியில் பயிற்சி செய்ய தடை விதிக்கப்பட்டன.
குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது .
1940 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1947 : தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்டது.
1949 : சேன் லியோன் சாங் சீனாவின் கொடியை
வடிவமைத்தார்.
1956 : திருவாங்கூர்- கொச்சி மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி பிரிக்கப்பட்டு தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய ம.பொ.சி. கைது செய்யப்பட்டார்.
1958 : ஜப்பானின் டோக்கியோ அருகே வீசிய கடும் புயலால் 600 பேர் உயிரிழந்தனர்.
1962 : ஏமன் அரபு குடியரசு அமைக்கப்பட்டது.
1975 : பீகார், தன்பாத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தால் 372 தொழிலாளர்கள் பலியானார்கள்.
1975 : ஸ்பெயினில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போராளிக் குழுவை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டனர். உலகெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1977 : ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மலேசியாவின் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 79 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.
1987 : கொலம்பியாவில் இடம்பெற்ற மழை வெள்ளத்தால் 680 பேர் உயிரிழந்தனர்.
1989 : இந்தியா பிரித்வி எனும் ஏவுகணையை ஏவியது.
1993 : அப்காசியா தலைநகரம் சுகுமியில் ஜார்ஜியப் பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
2001 : சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2008 : சீன விண்வெளி வீரர் சாய் சிகாங்க் விண்வெளியில் நடந்த முதலாவது சீனர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
2013 : மும்பையில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர் உயிரிழந்தனர்.
2014 : சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு
