ShareChat
click to see wallet page
*31 அக்டோபர் 1931* முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியான தினம் இன்று. இது தமிழின் முதல் பேசும்படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழில் வெளியான தனித்தமிழ் பேசும் படமல்ல; தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசிய பாடிய படமும் கூட. இப்படத்தை இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வைத் தயாரித்திருந்த பூனாவைச் சேர்ந்த அர்தேஷிர் இரானி என்பவராவார். 'காளிதாஸ்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அன்றைக்கு தென்னிந்திய நாடக மேடைகளில் புகழ் பெற்றிருந்த டி.பி.ராஜலட்சுமி ஆவார். கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வெங்கடேசன். இப்படத்தில் துணை நடிகர்களுள் ஒருவராக நடித்திருந்தவர் பின்னாளில் திரையுலக ஜாம்பவனாகக் கருதப்பட்ட L.V.பிரசாத் அவர்கள். 1931 அக்டோபர் 31 அன்று சென்னை கினிமா சென்ட்ரல் (பின்னாளில் ஸ்ரீமுருகன்) திரையரங்கில் வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், எட்டாயிரம் ரூபாய் செலவில், எட்டு நாளில் தயாரிக்கப்பட்டு, 75000 ரூபாய் வசூலித்ததாக தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன். H.M.ரெட்டி இயக்கியிருந்த இவ்வெற்றிப் படத்தின் மூலம் தமிழ்த்திரையின் முதல் நாயகியாக அறிமுகமான T.P.ராஜலெட்சுமி அவர்கள் 'சினிமாராணி', 'டாக்கி ராணி' என்கிற பட்டங்களையெல்லாம் பின்னாளில் பெற்றார் என்பது வரலாறு. #தெரிந்து கொள்வோம் #சினிமா #வரலாறு
தெரிந்து கொள்வோம் - & STORY BooK SONG O KALIDAs FiRsi TAMIL&TELUGUTALKIE' -!0_-0ப JMPERIAL MoviTONE AT KINEMA CENTRAL FAOAI SATUJrDAKDIoc. 18J1. & STORY BooK SONG O KALIDAs FiRsi TAMIL&TELUGUTALKIE' -!0_-0ப JMPERIAL MoviTONE AT KINEMA CENTRAL FAOAI SATUJrDAKDIoc. 18J1. - ShareChat

More like this