*உத்தரிகிற ஸ்தலத்தின் ஆத்துமங்களுக்கான, புனிதை ஜெர்த்ரூத்தம்மாளின் ஜெபமாலை*.
🌷📿🌷📿🌷📿🌷📿🌷📿🌷📿
*மூவொரு இறைவன் புகழ் :*
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுது ம் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿
*தூய ஆவியாரை நோக்கி மன்றாட்டு :*
தூய ஆவியாரே இறைவா! எழுந்தருளிவாரும்!
விண்ணகத்திலிருந்து உமது அருள் ஒளியின் கதிர்களை அனுப்பும், ஏழைகளின் தந்தையே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பேரொளியே, எழுந்தருளி வாரும். நிறை ஆறுதலானவரே, ஆன்மாக்களுக்கு இனிய விருந்தாளியே, பேரின்ப இரக்கமுள்ள இளைப்பாற்றியே, நோயில் நலமே! வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் ஆறுதலே எழுந்தருளி வாரும். மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிற பேரொளியே, உம் நம்பிக்கையாளர்களுடைய இதயத்தை நிரப்பும். உமது தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. தூய்மைற்றதை தூய்மையாக்கும். உலர்ந்ததை நனையும், காயங்களைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச்செய்யும். குளிரோடிருப்பதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பிய எமக்கு உம் திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணிய பேறுகளையும் நல்ல இறப்பையும், முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்குத்தந்தருளும். ஆமென்.
💖✨💖✨💖✨💖✨💖✨💖✨
*நம்பிக்கை அறிக்கை :*
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்
*🍄முதல் மூன்று சிறிய மணிகளில்🍄*
*🌹நித்தியப்பிதாவே! நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக*
சேசு மரியாயின் இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும்'பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன்.
*ஆமென்.!*
*🌹நித்தியப்பிதாவே! நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மையை சுத்திகரிப்பதற்காக*
சேசு மரியாயின்
இருதயங்களை, அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன்.
*ஆமென்.!*
*🌹நித்தியப்பிதாவே! நான் செய்யத் தவறிய நன்மைகளுக்கு ஈடாக..!*,
சேசு மரியாயின் இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். *ஆமென்.!*
*🌿🌹1.பெரிய மணியில்*
*தாய்த் திருச்சபையில் மரித்த சகல ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்*
*முதல்வர் :* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற
அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!.
*துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.
*ஆமென்.!*
*👑சிறிய மணியில் 10 முறை👑*
நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும், இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலி பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும், ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் .
பிதாவுக்கும்....
ஓ என் இயேசுவே....
*🌿🌹2.பெரிய மணியில்*
*உலகத்தில் மரித்த சகல ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்*
*முதல் :* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற
அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!.
*துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.!
*ஆமென்.!*
*👑சிறிய மணியில் 10 முறை👑*
நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் .
பிதாவுக்கும்....
ஓ என் இயேசுவே....
*🌿🌹3.பெரிய மணியில்*
*மரித்த, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்*
*முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற
அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!.
*துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.
*ஆமென்.*!
*👑சிறிய மணியில் 10 முறை👑*
நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் .
பிதாவுக்கும்.....
ஓ என் இயேசுவே.....
*🌿🌹4.பெரிய மணியில்*
*மாசற்ற மற்றும் கருச்சிதைவு செய்யப்பட்ட குழந்தைகள் ஆன்மாக்களுக்காகவும், இந்த மணிகளை அர்ப்பணிப்போம்*
*முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற
அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!.
*துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்!
*ஆமென்*!.
*👑சிறிய மணியில் 10 முறை👑*
நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் .
பிதாவுக்கும்....
ஓ என் இயேசுவே...
*🌿🌹5 பெரிய மணியில்*
*நம் இல்லங்களில் மற்றும் குடும்பங்களில் மரித்த, நம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்காகவும் இந்தமணிகளை அர்ப்பணிப்போம்*
*முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற
அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!.
*துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.!
*ஆமென்.*!
*👑சிறிய மணியில் 10 முறை👑*
நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்
பிதாவுக்கும்....
ஓ என் இயேசுவே.....
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
*உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்*
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் . அங்கே சகல அர்ச்சிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக ஆமென்
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
*உத்தரிகிற ஸ்தலத்தின் ஆத்துமங்களுக்கான பிரார்த்தனை*
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே
கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்
அர்சிஷ்ட மரியாயே ,
*பதில் : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்*
சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே.!
கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சிஷ்ட கன்னிகையே.!
அர்ச். மிக்கேலே..!
தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே..!
அர்ச். ஸ்நாபக அருளப்பரே..!
பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே..!
அர்ச். இராயப்பரே..!
அர்ச். சின்னப்பரே..!
அர்ச். அருளப்பரே..!
*பதில் : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்*
அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே..!
அர்ச். முடியப்பரே..!
அர்ச் லவுரேஞ்சியாரே..!
வேதசாட்சிகளான சகல அர்ச்சிஷ்டவர்களே..!
அர்ச். கிரகோரியாரே.!
அர்ச். அமிர்தநாதரே..!
அர்ச். அகுஸ்தீனாரே.!
அர்ச். எரொணிமுசே.!
மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே..!
வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே..!
குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே..!
சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே..!
அர்ச் . மரிய மதலேனே..!
அர்ச். கத்தரீனாளே..!
அர்ச். பார்பரம்மாளே..!
கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே.!
ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே..!
*தயாபரராயிருந்து..!*
அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
*தயாபரராயிருந்து.!*
எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி
சகல பொல்லாப்புகளிலே நின்று.!
*பதில் : அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி*
உமது கோபத்திலே நின்று.!
உமது நீதி அகோரத்திலே நின்று.!
பசாசின் வல்லமையிலே நின்று.!
கொடூர வியாகுலத்திலே நின்று.!
கொடிய ஆக்கினையிலே நின்று.!
மரணத்தின்
பயங்கரமான இருளிலே நின்று.!
அக்கினிச் சுவாலையிலே நின்று.!
துயரமான அழுகையிலே நின்று.!
உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று.!
தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து.!
தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து.!
தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து.!
தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து.!
தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து.!
தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து.!
தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து.!
தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து.!
தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து.!
தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து.!
தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து.!
தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து.!
தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து.!
தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து.!
தேவரீருடைய கொடூரமான மரணத்தைப் பார்த்து.!
தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து.!
எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த, தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து.!
தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து.!
தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து.!
தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப் பார்த்து.!
தேற்றரவு பண்ணுகிறவராகிய, இஸ்பிரீத்துசாந்துவின்ஆகமனத்தைப் பார்த்து..!
நடுத்தீர்க்கிற நாளிலே..!
பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம்.
*பதில் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி*
பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும், நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய, தேவரீரை மன்றாடுகின்றோம்.
மரணத்தின் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும், கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம்.
இரட்சண்யத்துக்கு உரியவர்கள், இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம்.
எங்கள் சகோதர, பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்துமங்களை, உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம்.
பூலோகத்திலே, யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும், தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.
கிறிஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும், குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும்உள்ள, ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம்.
பாவ தோஷத்தால், அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று, தேவரீரை மன்றாடுகின்றோம்.
அவர்கள் துயரைச், சந்தோஷமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம்.
அவர்களுடைய ஆசை நிறைவேற, தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்.
அவர்கள் உம்மைப் புகழ்ந்து, ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி, செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம்.
உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில், அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்.
சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம்.
கிருபையின் ஊறணியே தேவரீரை மன்றாடுகின்றோம்.
✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!
🌿அவர்களுக்கு *இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.*
✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!
🌿அவர்களுக்கு, *இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி*
✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே...!
🌿அவர்களுக்கு *நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.*
1 பர
முதல் : நரக வாசலில் நின்று அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும்.
சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக. அப்படியே ஆகக்கடவது.
துணை : சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.
*🌿🌹செபிப்போமாக :🙏🏻*
விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா , இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி ஆமென்.
*பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் பெயராலே ஆமென்.*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்

