#📺அரசியல் 360🔴 பாலஸ்தீனம் முழு விடுதலை அடைந்து சுதந்திரம் பெற்றால் மட்டுமே
உலகமே அமைதியை பெரும்..
பாலஸ்தீன பிரச்சனை முஸ்லிம்கள் அரபுகளின் பிரச்சனை அல்ல
அது மனித குலத்தினுடைய
அமைதி குறித்த பிரச்சினை.
மானுட குலத்தின்
மனிதம் வாழ்வதற்கான
அர்த்தங்கள் கொண்ட பிரச்சனை பாலஸ்தீன பிரச்சனை.
ஆட்சி அதிகாரத்தில் நாற்காலி மட்டுமே எனக்கு வேண்டும் என்று
எல்லாம் இழந்து சுயநலவாதிகளாக இருக்கும் நாடுகளில் தவிர
மற்ற உலக நாடுகள்
உலக மக்கள் எல்லோரும் விரும்புகின்ற தேசம் பாலஸ்தீன தேசம்.
ஆன்மீக ரீதியாகவும் புனித பகுதியாக இருக்கும் தேசத்தில்
ரத்தம் வழிந்து ஓடுவதை
நிறுத்துவதற்கு
மனித குலம் மேலும் மேலும்
முன்வர வேண்டும்.
யூத ஜியோனிஸ்ட்களும்
ஏகாதிபத்திய அகராதி பிடித்த
சிந்தனை தலைவர்கள் என்று ஒழிகிறார்களோ
அன்று உலகமும் விடுதலை பெறும்.
பாலஸ்தீனம் நிலை கொள்ளும்.
யூத ஜியோனிஸ்களும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளும் இன்று
"எதை விதைக்கிறார்களோ"
ஒரு நாள் அது அவர்களுக்கு எதிராகவே "விளையும்" என்பது
பூமிப் பந்து உலகிற்கு உணர்த்தும் உன்னத செய்தி.
உப்பை திண்ணவன்
தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்..
உலக மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள்
சுதந்திர காற்று வீசும் பாலஸ்தீனம் எப்போது மலரும் என்று.
அதிலே மிகப் பேராவல்
கொண்டவர்களில் நானும் ஒருவன்.
S.H.
