பறக்கும் தங்கம்.. பாதாளத்தில் டாலர்.. டிரம்ப் பற்ற வைத்த வெடியால் குழம்பும் உலக பொருளாதாரம்:
காரணங்கள்
தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயரப் பல முக்கிய காரணங்கள் உள்ளன.. புவிசார் அரசியல், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது, டாலர் மதிப்பு ஆகியவை பிரதானக் காரணமாக இருக்கிறது.
குறைய நோ சான்ஸ்:
இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் தங்கம் விலை உயர்வதற்கே வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை எட்டும் என்று பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சொசைட்டி ஜெனரல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதாவது தங்கம் விலை இங்கிருந்து 22% வரை உயரலாம் என்று எச்சரித்துள்ளனர். #பறக்கும் தங்கம்
