#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*بسم الله الرحمن الرحيم*
"எந்தப் பயனை நினைத்து ஜம் ஜம் தண்ணீரைப் பருகுவீர்களோ, அந்தப் பயனைக் கிடைக்கப் பெறுவீர்கள்."
- நபிகள் (ஸல்)
(இப்னுமாஜா : 3062).
கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.
மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது.
நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிராவிற்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது.
மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி யூனுஸ்(அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை. மீன் விழுங்கிய பிறகே கிடைத்தது.
யூசுப்(அலை) அவர்களின் சகோதரர்கள் யூசுப்(அலை) அவர்களை கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே கிடைத்தது.
எந்த மனிதனையும் அவனின் சக்திற்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறைவனின் வாக்கு. மேலே சொல்லியிருக்கும் எதுவுமே நம்ப முடியாத நடக்குமா என்கிற கேள்வி சிந்திக்கும் எந்த மனிதனுக்கு தோன்றும் நிகழ்வுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு அவர்களின் வேதனையில் உச்சத்தில் அல்லாஹ் (ﷻ) தன்னுடைய உதவியை அனுப்பினான்.
சோதனை என்பதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது என்பதை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்..
படியுங்கள் சிந்தியுங்கள் வாழ்வியலாக்குங்கள்❤🤝
